Ad

வியாழன், 23 ஜூலை, 2020

`எங்கே மனிதன்...?’ - ஆதங்கக் கவிதை #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சூரியன் உதிக்கும்முன் விழித்த மனிதன் எங்கே..?

சந்திரன் உச்சம் தொடுமுன் உறங்கிய மனிதன் எங்கே..?

சின்னஞ்சிறு குருவியின் கீச்சல்களுடன்...

ஜன்னல் வழியே வந்து தொடும் செங்கதிர்கள்...

இயற்கை காற்றுடன் வயல்வெளி சென்று...

இயற்கையில் ஒன்றான நீருடன் விளையாடி கரையேறிய....

மனிதன் எங்கே....???

Village

பால் கறந்த மாட்டு மடுவின்...

சூடு குறையும் முன்னே...

கறந்த பாலோ தொண்டைக்குழி சேரும்

கலப்படம் ஏதுமின்றி....

வீட்டைச்சுற்றி பசுந்தோட்டமாக

தேவைக்கேற்ற காய்கனிகளும்...

தோட்டத்தில் உள்ள பழம்,கீரை அனைத்தும்

தூரத்திலுள்ள சொந்தத்திற்கு பறித்த வடு

மாறும்முன்னே கொண்டு சென்ற ...

மனிதன் எங்கே...?

Also Read: அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை #MyVikatan

வீட்டில் ஒரு விசேஷம் என்றால்...

அங்காளியும் பங்காளியும்

அரைமாதம் முன் வந்தே

அலங்கரித்த வீடுகளை....

தாய்மாமன் சீர்வந்து

முழுமைப்படுத்தும் விசேஷத்தை...

திருவிழாபோலே....

இரவுணவு முடித்தபின்பு...

தாத்தாவின் பழங்கால கதைபேசி...

முற்றத்தின் நடுவிலே அம்மாவின் மடிசாய்ந்து..

உச்சம்தொடும் நிலவை ரசித்துக்கொண்டே...

தூங்கிய மனிதன் எங்கே...?

Village life

இயற்கையோடு ஒன்றிணைந்து...

செயற்கையை புகுத்தாமல்...

இயற்கையாக வாழ்ந்தான்

மனிதன் அன்று....

இயற்கையை அழித்துவிட்டு

செயற்கையான வாழ்கை முறையில்...

இயற்கையைத்தேடி அலைகிறான்...

மனிதன் இன்று.....

-செ.அபு

காரைக்குடி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/poetry-about-village-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக