Ad

வியாழன், 23 ஜூலை, 2020

`ரஜினி இ-பாஸ் விவகாரத்தில் விசாரணை!’- செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் #NowAtVikatan

ரஜினி இ-பாஸ் விவகாரத்தில் விசாரணை!

நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்ற விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்துக்கு காரில் சென்ற புகைப்படம் வைரலானது. இதையடுத்து, அவர் இ-பாஸ் பெற்றாரா என்ற சர்ச்சை எழுந்தது. அவர் இ-பாஸ் பெற்றதாக சென்னை மாநகராட்சி விளக்கமளித்தது. ஆனால், இ-பாஸ் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், ``நடிகர் ரஜினிகாந்த் பெற்ற இ-பாஸ் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். முறைகேடு நடந்திருந்தால் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

-துரைராஜ் குணசேகரன்

Also Read: கார்த்திகையில் கட்சித் தொடங்கும் ரஜினி!? வெளிவருமா ஸ்டாலின் வீட்டு மின்கட்டணம்? - கழுகார் அப்டேட்ஸ்!

போலீஸாரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

மதுரை உயர் நீதிமன்றக் கிளை

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த காவலர்கள் முத்துராஜ் மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Also Read: சாத்தான்குளம்: `கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள்!’ - விசாரணை பாதிப்பு

சுதந்திர தின வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு!

கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அழைக்கப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு

சுதந்திர தின நிகழ்ச்சிகளில் அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்டவைகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: `சுதந்திர தினத்தில் எந்த மரியாதையும் இல்லை!'- கண்ணீர் வடிக்கும் தர்மபுரி தியாகியின் மனைவி



source https://www.vikatan.com/news/general-news/24-07-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக