Ad

திங்கள், 20 ஜூலை, 2020

நம்பிக்கை..! - கொரோனா கால குட்டிக்கதை #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!e

இந்தக் கொரோனா காலத்தில் நாம் அனைவருமே பொருளாதார அழுத்தங்களில் சற்றே மனம் தளர்ந்து போயிருப்போம். ஒரு விதமான குழப்ப மனநிலையில் பார்ப்பவர், பேசுபவர், உடன் இருப்பவர் மீது ஒரு வகையான எரிச்சலை வெளிப்படுத்தி வருகிறோம். இச்சமயம் நான் முன்பொரு நாளில் படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது. விகடன் வாசகர்களோடு அதை மீண்டும் நினைவுகூர விரும்புகிறேன். ஒரு ஊரில் உள்ள சுப்புராயன் தெருவில் கணபதி அண்ணாச்சி சிறிய மளிகைக் கடை நடத்தி வந்தார்.

Representational Image

கடை சிறியதாக இருந்தாலும் அவரிடம் எந்தப் பொருளும் இல்லாமல் இருக்காது. அப்படியே இல்லை என்றாலும் அடுத்த நாள் சந்தைக்கோ டவுனுக்கோ சென்று வாடிக்கையாளர் கேட்டப் பொருளை வாங்கிக் கொடுத்துவிடுவார். முன்ன பின்ன சில்லறை குறைந்தாலும் அண்ணாச்சி தன் கடைக்கு வந்தவரை எந்த வகையிலும் காயப்படுத்தாமல் இல்லை என்று கூறாமல் கனிவாய் நடந்துகொள்வார்.

கிட்டத்தட்ட அந்தத் தெரு முழுவதும் அவர் கடைதான் சப்ளை செய்து வந்தது. திடீரென்று ஒரு நாள் அவர் கடைக்கு எதிர்புறம் இருந்த வெற்று இடத்தில் சிறிய கூடாரங்கள் அமைத்து மணல், ஜல்லி அனைத்தும் இறக்கப்பட்டு சற்று விசாலமான ஒரு கட்டடம் எழுப்பப்பட்டது. இவர் அங்கே உள்ள இன்ஜினீயரிடம் சென்று விசாரித்ததில் அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் வர உள்ளது என்றார்.

அண்ணாச்சி அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. சரி சரிப்பா என்று தன் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார். கட்டடம் கட்டி முடிக்கப்பெற்று சூப்பர் மார்க்கெட் திறந்து ஓரிரு வாரங்களில் அத்தனை கூட்டமும் அங்கே சென்றது.

அண்ணாச்சி கடை வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு ரூபாய் பொருள் என்றாலும் மக்கள் அனைவரும் அங்கேயே செல்ல விருப்பம் காட்டினார்கள். அண்ணாச்சி கொஞ்சம் மனம் சோர்ந்து மிகுந்த கவலையோடு தன் குரு ஒருவரை பக்கத்து ஊரில் பார்க்கச் சென்றார். குருவிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி மிகுந்த துன்பம் அடைந்தார். அதற்கு குரு இவ்வளவுதானா இதற்கா வருத்தப்படுகிறாய்.

Representational Image

எளிமையான ஒரு தீர்வு சொல்கிறேன் என்று கூறினார். கணபதி அண்ணாச்சி உடனேயே இதற்குத் தீர்வு இருக்கிறதா குருவே என்று ஆர்வமுடன் கேட்டார். நிச்சயம் கணபதி. இன்றிலிருந்து நானும் நல்லா இருக்கணும் அந்த சூப்பர் மார்க்கெட்காரனும் நல்லா இருக்கணும் என்று நினைத்துக்கொள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நினைத்துக்கொள். எப்பொழுதெல்லாம் சோகப்படுகிறாயோ அப்பொழுதெல்லாம் நினைத்துக்கொள் என்றார். கணபதிக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் குருவின் பேச்சைக் கேட்டு ஆகட்டும் குருவே என்று கூறி வீட்டிற்குச் சென்றார்

ஒரு எட்டு மாதங்கள் கழித்து அந்தப் பக்கமாக வந்த குரு, கணபதி வீட்டிற்குச் சென்று என்ன கணபதி எப்படி இருக்க என்று கேட்டார். நல்லா இருக்கேன் குருவே இப்போ நான் என் கடையை மூடிட்டேன். ஆனா அதே சமயம் அந்த சூப்பர் மார்க்கெட்டையே வாங்கிட்டேன் என்றார்.

இந்தக் கதை உணர்த்தும் கருத்து மிக எளியதுதான். ஒரு மாற்றம் வரும் சமயம் நாம் அதைப்பார்த்து அஞ்சி நடுங்கி பயத்தில் ஒடுங்கி விடக்கூடாது. அதேசமயம் மாற்றத்தைக் கொண்டு வந்தோரை வசைபாடுவது நமக்கு எந்த வகையிலும் சிந்திக்க விடாது. இது போன்ற சமயங்களில் நாம் நமது எண்ணங்களை மிகவும் நேர்த்தியாக நேர்மறையாக வைத்துக்கொண்டால் தெளிவாகச் சிந்திக்க முடியும்.

Representational Image

அந்தத் தெளிவு நமக்கு புது தெம்பைத் தரும். அது தன்னம்பிக்கையாக மாறும். பிறகு உத்வேகம் பிறக்கும். நல்ல முடிவுகளை நோக்கி நம் பாதையை வழிவகுக்கும். இந்த கொரோனா காலம், கணபதி அண்ணாச்சி கடை போன்று நல்லா ஓடிக்கொண்டிருந்த நம் வாழ்க்கையில் எதிரே வந்த சூப்பர் மார்க்கெட் போன்று திடீரென்று முளைத்துள்ளது. இதை நாம் தடுக்க முடியாது. இந்தப் பெரிய அபாயத்தைப் பார்த்து மனம் தளர்ந்துவிடாமல், மிகச்சரியான எண்ணங்களை இச்சமயம் விதைத்து இதிலிருந்து நாம் எவ்வாறு மேலே எழுந்து மீண்டு வருவது என்று ஆராய்வோம் மனித குலம் நிச்சயம் இதை வென்று எடுக்கும்!!

- நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/micro-story-of-a-successful-business-man

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக