பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
``கைல காசு இல்லைன்னா என்ன அஞ்சு லட்சத்துக்கு லோன் போடு.. அதுல நல்லா ஜாம் ஜாம்னு கல்யாணத்த பண்ணிரலாம் சேவிங்ஸையெல்லாம் எடுத்து கல்யாணத்தைப் பண்ணு... வாழ்க்கையில ஒரு தடவை நடக்கிற நல்ல காரியம். இதுக்கு பண்ணாம வேறெதுக்கு பண்ணுவ...’’
இந்த மாதிரி பல அறிவுரைகளைக் கேட்டுதான் திருமணங்களை நடத்துகின்றனர். நடுத்தர சம்பாத்யம் உடைய குடும்பமாக இருந்தாலும் நிச்சயம் சற்று ஆடம்பரமாகச் செய்யத்தான் நினைக்கிறார்கள்.
``கையில இருக்க காசு வெச்சு கல்யாணத்த பண்ணிரலாமே’’ என்று வீட்டில் உள்ளவருக்குத் தோன்றினால் அந்த எண்ணத்தை கலைக்க வீடு தேடி வந்துவிடுவார்கள்.
``கல்யாணத்த எந்த மண்டபத்துல வெக்கிறதா இருக்கீங்க... உங்க தம்பி பெண்ணுக்கே அந்த மண்டபம். நீங்க அதைவிட பெரிய மண்டபத்துலதான் வெக்கணும். அப்புறம் இப்போவெல்லாம் நைட் டிபன்ல நானும் பன்னீர் பட்டர் மசாலாவும் போடறதுதான் உசிதம். அத்தை மாமன் முறை வேறு நான்தான் தாய்மாமன் முறை செய்யணும் எனக்கும் என் மனைவிக்கும் பட்டு வேட்டி சீலை என் பசங்களுக்குத் துணி எடுத்து குடுத்துறுங்க... இதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றும். என் சித்தப்பா கல்யாணத்தில் பெரிய அத்தைக்கு குடுத்த பட்டு புடவையைவிட தனக்கு குடுத்தது தரம் குறைந்தது என்று சின்ன அத்தை யாரிடமும் சரியாகப் பேசலை. தாலி கட்டினதும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிட்டார்’’ என்று கொளுத்திப் போட்டுவிட்டுப் போவார்கள்.
பின் மணமக்களுக்கு இருக்கும் ட்ரெண்டி ஆசைகள் வேறு டிபார்ட்மெண்ட். ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட், போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட். மணமகளோ இறுதியாக மணம் ஆன ஏதோ ஒரு தோழியின் வீடியோ ஷூட் காண்பித்து இப்படியும் செய்யலாம் என்பாள். அந்த ஆசையையும் வருங்கால கணவன் நிறைவேற்ற வேண்டும். இதற்கும் சில லட்சங்களை ஒதுக்க வேண்டும் மணப்பெண்ணிற்கு ஆடை அலங்காரம்..
மெஹந்தி பங்ஷன் முதல் ஒவ்வொரு வேலைக்கும் வித விதமான மேக் அப்கள்... ரிசப்ஷன்க்கு லெகங்கா... மணப்பெண்ணின் தங்கைக்கு ஆடை அலங்காரம்... இவையெல்லம் தனிப் பட்டியல். சொல்லப்போனால் பட்டுப் புடவை சண்டை தவிர மற்ற எல்லாம் கடந்த பத்து பதினைந்து வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். அந்த மாற்றங்களும் இன்று மாறியது.
இனி கல்யாண வழக்கங்களை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் எனப் பிரிக்கலாம். ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட கல்யாணம்தான் இப்போது நடக்கிறது என்று பார்த்தால், ஆடம்பரம் விரும்பாதவர்களும் நடுத்தர குடும்பத்தினரும் இப்பொழுது வேக வேகமாகப் பொண்ணு மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்து திருமணம் செய்துகொண்டு இருக்கின்றனர். பெரும்பாலும் வீட்டிலேயே திருமணம்.
யோசித்துப் பார்த்தால் 100 வருடத்துக்கு முன் திருமணங்கள் வீட்டில்தான் நடந்தேறி இருக்கும். அப்புறம் கோயில்கள். மீண்டும் திரும்பியது அக்காலம்.
அத்தையும் சித்தியும் தலைப் பின்னி குஞ்சம் வைத்து கண்ணுக்கு மை இடுகின்றனர். தலையில் காகித பூவோ கலர் பூவோ இல்லை. குண்டு மல்லி மொட்டு விரிந்து மணக்கிறது. வீட்டிலேயே நெருங்கிய உறவினர்களை அழைத்து திருமணம் செய்கின்றனர். ஆசீர்வாதம் மட்டும் செய்ய விரும்புகிறவர்கள் நேரில் வந்து வாழ்த்துகின்றனர். இல்லையெனில் அலைபேசியில்.
`பொண்ணு வீட்ல தரக்கொறவா நினைச்சிடுவாங்க... மாப்பிள்ளை வீட்ல என்ன நினைப்பாங்க...’’ என்றெல்லாம் யோசித்து தேவையற்று செய்யும் கெளரவ செலவுகள் இனி அழியும்.
முன்பைவிட அதிக சந்தோஷமும் நிம்மதியும் அதிகமே இருக்கிறது கொரோனாவுக்குப் பின்னான திருமணங்களில்.
இந்தக் கட்டுரையை டைப் செய்துகொண்டிருக்கும்போதே அம்மாவும் அருகில் வந்து அமர்ந்தார்.
"ரேவதி அங்க என்னடி போன்ல பண்ணிக்கிட்டு இருக்க. நீ ஒரு பையன விரும்புறன்னு சொன்னியே... அவன குடும்பத்தோட வரச் சொல்லு... அப்பாக்கு சம்மதமாம் கல்யாணத்த சீக்கிரம் வெச்சுக்கலாம்னு சொல்றாருடி" அம்மாதான் கூப்பிட்றாங்க. நான் போய் அந்த வேலையைப் பாக்கறேன்.
- செ.ரேவதி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/traditional-marriages-vs-lock-down-marriages
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக