Ad

வியாழன், 23 ஜூலை, 2020

Corona Live Updates: 50,000-த்தை நெருங்கும் தினசரி எண்ணிக்கை! - இந்தியாவில் 13 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் 13 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 49,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 740 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,601ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,17,209 ஆகவும் உயர்ந்துள்ளது.

Also Read: கொரோனா: `நிமிடத்துக்கு 43 பேர்; மணிக்கு 2,600 பேர்!’ - பாதிப்பால் திணறும் அமெரிக்கா

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,40,155 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 95,28,714 ஆக அதிகரித்திருக்கிறது. 6,32,173 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Corona spread

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 76,00 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் எண்ணிக்கை 144,000 ஆக இருக்கிறது. அங்கு 40 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: `குடும்ப உறுப்பினர்களால் அதிகம் பரவிய கொரோனா!' - அதிர்ச்சி கொடுத்த ஆய்வு



source https://www.vikatan.com/news/general-news/24-07-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக