Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

Corona Live Updates: `இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு’ - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மொத்த பாதிப்பு, 10,38,716 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

கொரோனா தொற்று நோய்

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,53,751 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,58,692 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/1872020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக