Ad

புதன், 15 ஜூலை, 2020

Corona Live Updates: இந்தியாவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா... 6 லட்சத்தைக் கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,68,876 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா 360

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 606 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,915 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,12,815 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,31,146 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/1672020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக