Ad

வியாழன், 16 ஜூலை, 2020

Corona Live Updates: `10 லட்சத்தை கடந்த பாதிப்பு; 25,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மொத்த பாதிப்பு, 10,03,832 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனை

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,602 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,35,757 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,42,473 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/1772020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக