Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

தங்கம், வெள்ளி விலை குறைவு! - இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? #ChennaiGoldRate

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டின் பக்கம் திரும்பியிருக்கின்றனர்.

Also Read: `சென்ற ஆண்டு 77.7 டன்; இந்த ஆண்டு 11 டன்!’ -தங்கம் இறக்குமதி வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் போன்றவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை மளமளவென உயர்ந்து வருகிறது.

முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், மக்களுக்கும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைத்தான் நினைக்கிறார்கள். இதனால் தங்கம் விலை தற்போது அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை சற்றே இறக்கத்தைச் சந்தித்துள்ளது.

Also Read: தங்கத்தில் முதலீடு செய்ய சரியான வழி..! - ‘கமாடிட்டி நிபுணர்’ ஷியாம் சுந்தர்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைய விலையைவிட கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 4,685 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு 168 ரூபாய் குறைந்து 37,480 விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை (8 கிராம்) 39,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து 56.60-க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில்...

சென்னையைவிட, மற்ற நகரங்கள் தங்கத்தின் விலை சற்றே வித்தியாசத்துடன் இருக்கும். மும்பையில் இன்று ஒரு கிராம் தங்கம் 4,751 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. சண்டிகரில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. இன்று ஒரு கிராம் தங்கம் 4,751 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. டெல்லியில் ஒரு கிராம் தங்கம் 4,796 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 4,850 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. சென்னை மற்றும் சில நகரங்களைத் தவிர, மற்ற நகரங்களில் இன்றைய தங்கம் விலை ஏற்றத்திலேயே தொடர்கிறது.



source https://www.vikatan.com/business/money/gold-and-silver-price-down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக