Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

நெல்லை: `மக்களின் ஆதரவைத் தக்கவைப்போம்!' - திறக்கப்பட்ட `இருட்டுக்கடை’ அல்வா

நெல்லையின் அடையாளங்களுள் ஒன்றாக இருப்பது, இருட்டுக் கடை அல்வா. நெல்லையப்பர் கோயிலின் எதிரில் உள்ள இந்தக் கடைக்கு விளம்பரப் பலகைகூட கிடையாது. 40 வாட்ஸ் குண்டு பல்ப் வெளிச்சத்தில் இருட்டுக் கடை செயல்பட்டு வருகிறது. 

இருட்டுக்கடை அல்வா

மாலையில் 5 மணிக்குத் தொடங்கும் வியாபாரம் இரவு 8 மணிக்குள் முடிவடைந்துவிடும். அன்றன்று தயாரிக்கப்படும் அல்வாவை அன்றே விற்பனை செய்துவிடுவது வழக்கம். இந்தக் கடையில் அல்வா வாங்குவதற்குக் கூட்டம் அலைமோதும் என்பதால் காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவார்கள்.

Also Read: ``தெரியாம பண்ணிட்டேனே...!''- தற்கொலைக்கு முன் கலங்கிய `இருட்டுக்கடை' ஹரிசிங்

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவந்த அல்வா கடை, நெல்லையின் அடையாளமாகவே மாறிப்போயுள்ளது. கடையின் உரிமையாளராக இருந்த ஹரிசிங் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தன்னால் கடையின் நற்பெயர் கெட்டுவிட்டதாக வேதனையடைந்த அவர் கடந்த 25-ம் தேதி மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மூடப்பட்டிருந்த இருட்டுக்கடை

அதனால் இருட்டுக்கடையை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 25-ம் தேதி மூட உத்தரவிட்டனர். அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. கடை மூடப்பட்டது அறியாமல் தினமும் ஏராளமானோர் அல்வா வாங்கச் சென்று ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

மாநகராட்சி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்ட பின்னர் இருட்டுக்கடை அல்வா விற்பனை நேற்று (14-ம் தேதி) மாலை முதல் மீண்டும் தொடங்கியிருக்கிறது. மறைந்த ஹரிசிங்கின் மகள் வழிப்பேரனான சூரஜ்சிங் கடை விற்பனையைக் கவனித்தார்.

இதுபற்றி சூரஜ்சிங் கூறுகையில்,”கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து அனைவரும் பணியாற்றுகிறோம். எங்கள் கடையில் ஏற்கெனவே இருந்த தரமும் ருசியும் தொடர்ந்து இருக்கும். அதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்” என்றார்.

Also Read: `இருட்டுக்கடை' அல்வா உரிமையாளர் மரணம் உணர்த்திய பாடம்! -நெல்லை வாசகி #MyVikatan



source https://www.vikatan.com/news/general-news/nellais-pride-iruttukadai-halwa-shop-has-opened-after-20-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக