Ad

சனி, 11 ஜூலை, 2020

கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம்: பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி

விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை, தங்களின் வீட்டின் குடும்ப உறவாகவே நேசிக்கிறார்கள். வருமானம் ஈட்டித் தரக்கூடிய முக்கிய ஆதாரமாகவும் இவைகள் விளங்குகின்றன. இவைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும்போது, விவசாயிகள் செய்வதறியாது கலங்கிப்போய்விடுகிறார்கள். தங்களது கால்நடைச் செல்வங்களை, நோய் பாதிப்புகள் ஏற்படாமல் ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்கும், பாதிப்புகளிலிருந்து எளிதாக மீட்டெடுப்பதற்கும், பாரம்பரிய மூலிகை மருத்துவம் பெரிதும் கைகொடுக்கும். இதற்கு வழிகாட்டும் வகையில்தான், ’கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சிக்கு பசுமை விகடன் ஏற்பாடு செய்துள்ளது.

டாக்டர் புண்ணியமூர்த்தி

தற்போது மழைக்காலம் நெருங்கிவிட்டது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கடும் சவால்களை சந்திக்க நேரிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் கிளர்ச்சிகள் ஏற்பட வாய்ப்புண்டு. மழைக்காலங்களில் வழக்கத்தைவிட கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையான பராமரிப்பும் இல்லையென்றால் சளி, காய்ச்சல், ஜன்னி, கழிச்சல், உடலில் புண் உள்ளிட்ட இன்னும் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டு, விபரீதமான சூழல் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். கோமாரி, துள்ளுமாரி, சப்பைநோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. மற்ற காலங்களிலும் நாம் எதிர்பார்க்காத வகையில் வேறு சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். இதுபோன்ற பிரச்னைகளை நம் விவசாயிகள் அவ்வபோது சந்தித்து கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். எல்லா நேரங்களிலும் மருத்துவர்களை மட்டுமே நம்பியிருக்க இயலாது. இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து விவசாயிகள் தங்களுடைய ஆடு, மாடு, கோழிகளை எவ்வாறு எளிதாக பாதுகாக்கலாம் என்பது குறித்து கால்நடை மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தி சில ஆலோசனைகளை வழங்குகிறார்.

இவர் தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர், பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். தற்போது தேசிய பால்வள நிறுவனத்தின் மூலமாக, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள அரசு பால்வள நிறுவனங்களில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு மூலிகை மருத்துவ பயிற்சி அளித்து வருகிறார். இவர் சொல்லும் வழிமுறைகள் மிகவும் எளிமையானவை. விவசாயிகள் தங்கள் வீட்டின் அஞ்சறைப் பெட்டிகளில் உள்ள மளிகைப் பொருள்களையும், சுற்றுப்புறங்களில் கிடைக்கும் மூலிகைகளையும் பயன்படுத்தி, தங்கள் கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இவரது ஆலோசனைகளால், தமிழ்நாட்டில் காப்பாற்றப்பட்ட கால்நடைகள் ஏராளம். இவர் சொல்லும் வைத்தியம் மிகவும் எளிமையானது.

கால்நடைகள்

இதனால் ஏராளமான விவசாயிகளின் மனதில் இடம்பெற்றுள்ளார். கால்நடை மூலிகை மருத்துவம் என்ற தலைப்பில் பசுமை விகடன் நடத்தும் இந்த நேரலை [ஆன்லைன்] பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது இலவச பயிற்சி. கட்டணம் கிடையாது.

நாள்: 23.7.2020 [ வியாழக்கிழமை ]

நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

இதில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அல்லது, க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

க்யூ.ஆர். கோட்


source https://www.vikatan.com/living-things/animals/online-event-by-pasumai-vikatan-on-animals-care

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக