Ad

வியாழன், 16 ஜூலை, 2020

`சாம்சங்குக்கு 950 மில்லியன் டாலர் அபராதம் கட்டிய ஆப்பிள்!' - பின்னணி என்ன?

ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்கள் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாகப் பல காலமாக இருந்துவருகிறது சாம்சங். அந்த நிறுவனத்தின் போன்கள் மட்டுமல்லாமல் உலகமெங்கும் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பலவும் சாம்சங்கின் டிஸ்ப்ளேவையே அதன் போன்களில் பயன்படுத்துகின்றன. இதில் ஆப்பிள் நிறுவனமும் விதிவிலக்கல்ல. எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையைவிடக் குறைவான OLED டிஸ்ப்ளே பேனல்களை கொள்முதல் செய்தமையால், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து 950 மில்லியன் டாலர் வரை சாம்சங் நிறுவனம் அபராதம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samsung

சாம்சங் நிறுவனம் தனது OLED டிஸ்ப்ளே வியாபாரம் மூலம் மட்டும் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டியிருப்பதாகப் பெற்றதாக அறிவித்தது. இதைத் தனது இரண்டாவது காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது அந்த நிறுவனம். இருப்பினும், சாம்சங்குக்கு எங்கிருந்ததெல்லாம் பணம் வந்தது என அதில் குறிப்பிடவில்லை.

டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டன்டின் (Display supply chain Consultant) சமீபத்திய அறிக்கையில், அந்தக் கட்டணம் உண்மையில் `ஆப்பிள்' நிறுவனத்திடமிருந்து வந்ததுதான் எனத் தெரிவித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆப்பிள் நிறுவனம் குறைந்தபட்ச எண்ணிக்கையில்தான் சாம்சங் நிறுவனத்திடமிருந்து OLED டிஸ்ப்ளேக்களை வாங்கியதுதான். இதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது சாம்சங் நிறுவனம். இது ஆப்பிள்-சாம்சங் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம்தானாம். இந்த அபராதத்தை மொத்தமாக ஜுன் மாதம் பெற்றதால் இரண்டாம் காலாண்டில் நஷ்ட கணக்குக் காட்டியிருக்க வேண்டிய சாம்சங் லாபம் ஈட்டியிருக்கிறது.

Also Read: `இந்தியாவுக்கு மாறும் ஐபோன் தயாரிப்பு!' - சீனாவை கழற்றிவிடும் ஆப்பிள்

பரவலாகப் பரவி வரும் கொரோனா தொற்றால், ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் தனது கிளைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது. அதனால் எப்போதும் போல லாபத்தை ஈட்டமுடியவில்லை. இதனால் தேவையில்லாமல் டிஸ்ப்ளேவை அதிக அளவில் வாங்க வேண்டாம் எனத் தவிர்த்திருக்கிறது ஆப்பிள்.

வரும் செப்டம்பர் மாதம் தனது ஐபோன் 12 வெளியாகவிருக்கும் நிலையில் ஸ்மார்ட்போன் சந்தை COVID-19-க்கு பிறகு எப்படி இருக்கும் எனக் கணிக்க முடியாமல் மற்ற நிறுவனங்களைப் போலத் திணறிவருகிறது ஆப்பிள்.



source https://www.vikatan.com/technology/gadgets/why-apple-had-to-pay-1-billion-penalty-to-samsung

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக