Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வங்கிகளின் சேவைக் கட்டணம் உயர்கிறது! - என்ன காரணம்?

நாட்டின் சில முக்கிய வங்கிகள், வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சேவைக் கட்டணங்களை உயர்த்துகின்றன.

அதன்படி மஹாராஷ்டிரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவற்றில் குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்கவில்லை என்றால், கட்டணம் விதிக்கப்படும். வங்கிகளிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கட்டணமும் உயர்த்தப்படும் என இந்த வங்கிகள் கூறியுள்ளன.

Also Read: தனியார் வங்கிகளில் தலைசிறந்த வங்கி! - ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வளர்ச்சிப் பாதை!

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி மாத சராசரி தொகையாக 1,500 ரூபாய்க்குப் பதிலாக 2,000 ரூபாயை இருப்பு வைக்க வேண்டும். மீறினால் மாதந்தோறும் நகர்புற கிளைகளில் 75 ரூபாய், புறநகர் கிளைகளில் 50 ரூபாய், கிராமப்புற கிளைகளில் 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் 5,000 ரூபாய் இருப்பு வைக்க வேண்டும். ஒரு மாதத்தில் மூன்று இலவச ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கு மேல் பணத்தை எடுத்தால் 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். லாக்கருக்கான வைப்புத்தொகை குறைக்கப்பட்டாலும், லாக்கர் வாடகைக்கான நிலுவைத் தொகை அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏன்... என்ன காரணம்?

கொரோனா காலங்களில், தடையில்லாமல் அதிவேகமாக இயங்கும் துறைகளில் முக்கியமானது வங்கித்துறை. இதனால் பல வங்கிகளின் வட்டி வருமானமும் லாபமும் அதிகரித்திருக்கிறது. இருப்பினும், வங்கி சார்ந்த சேவைகளும் நடவடிக்கைகளும் அதிகரித்திருக்கின்றன. மக்களின் ஏ.டி.எம் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாகவும், இ.சி.எஸ் மற்றும் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கான பணப்பரிவர்த்தனையும் அதிகரித்திருப்பதாக வங்கித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனாலேயே சில முக்கிய வங்கிகள், தங்களின் சேவைக்கட்டணங்களை அதிகரிக்கும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்பது வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கூட்டுறவு வங்கிகள்! - பின்னணி என்ன..?

இத்தகைய சூழலில், உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு இருந்தால், அதிகம் பயன்படுத்தும் வங்கிக் கணக்கை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற வங்கிக் கணக்குகளை நிறுத்துவதுதான் நல்லது. ஏனெனில் பயன்படுத்தாத வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் பட்சத்தில், தேவையில்லாமல் அதற்கும் சேர்த்து பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.



source https://www.vikatan.com/business/banking/banks-increasing-service-charges-from-august-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக