உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த இக்கட்டான கட்டத்தில் பல உலக நாடுகளுக்கு இந்தியா தேவையான மருந்துகளை வழங்கியது. குறிப்பாக, அமெரிக்கா பிரேசில் எனக் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளும் பல சிறிய ஆசிய நாடுகளுக்கும் இந்தியா மருத்துவ உதவிகளைத் தக்க நேரத்தில் செய்தது.
இந்த நிலையில் இந்தியா தற்போது உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை ஏற்று வடகொரியாவுக்கும் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகளை வழங்கியுள்ளது. இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
``கொரியாவில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு குறிந்து அறிந்ததும் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகளை வழங்க முடிவு செய்தது” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் உலக சுகாதார அமைப்பின் காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இந்த மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி முன்னிலையில் இந்த மருந்துகள் வடகொரியாவுக்கான இந்திய தூதர் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
Also Read: `மூச்சுப் பயிற்சி; மூலிகை மருந்துகள்!’ - தேனியில் கோவிட் கேர் சித்த மருத்துவ சிகிச்சை மையம்
source https://www.vikatan.com/news/international/india-extends-medical-assistance-worth-about-usd-1-million-to-north-korea
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக