கொரோனாவின் கொடையால் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற கலாசாரம் நம்மை ஆட்கொண்டுள்ளது. வீட்டையே அலுவலகமாக மாற்றிக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். வீட்டிலேயே இருந்து வேலைபார்ப்பதால் உணவு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.
தாமதாகச் சாப்பிடுவது, நொறுக்குத்தீனிகளை அதிகம் கொரிப்பது, உணவைத் தவிர்ப்பது என ஆரோக்கியத்தைத் தவறவிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஓரிரு மாதங்களிலேயே உடல் பருமன் போன்ற பிரச்னைகளும் லேசாக எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன.
WFH-ல் தொலைத்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் வகையில் டயட் ஆலோசனைகளை வழங்கும், இலவச ஆன்லைன் நிகழ்வை நடத்துகிறது ஆனந்த விகடன்.
பிரபலங்களின் டயட்டீஷியனான ஷைனி சுரேந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கவுள்ளார். இவர் இத்துறையில் 20 வருட அனுபவம் உள்ளவர். கார்த்தி, சசிகுமார், மஞ்சிமா மோகன், ஐஸ்வர்யா ராஜேஷ் எனத் திரைப் பிரபலங்கள் பலரும் தொழில்துறை பிரபலங்களும் இவரிடம் டயட் ஆலோசனைகள் பெற்றுப் பலனடைந்தவர்கள்.
நிகழ்ச்சி நடைபெறும் நாள்: ஜூலை 8, 2020 (புதன்கிழமை)
நேரம்: மாலை 6.30 - 7.30
இந்த இலவச வெபினாரில் கலந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் க்ளிக் செய்யவும்.
https://ift.tt/3ipv6yq
source https://www.vikatan.com/events/editorial/ananda-vikatan-organise-free-online-webinar-on-wfh-diet-guidance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக