2 மாதம் எந்தச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தக் கூடாது!
தமிழகம் முழுவதும் 'காவலர்களின் நண்பன்' (Friends of Police) படையினரைப் பயன்படுத்தக் கூடாது எனக் காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை இரண்டு மாதங்களுக்கு எந்தச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Also Read: Sathankulam Friends Of Police-ஐ விசாரிக்கத் தயங்குகிறதா CB-CID? |The Imperfect Show 03/7/2020
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்களின் நண்பர் படையினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 6 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். சீருடை அணியாத 'காவலர்களின் நண்பன்' (Friends of Police) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களிடம் அத்துமீறுவதாகவும் போலீஸ் விசாரணையில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், இவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், இரண்டு மாதங்கள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பைக் கலைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Also Read: Friends of Police: `இவர்களின் அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல!'
source https://www.vikatan.com/news/general-news/5-7-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக