அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா தொற்று!
கோவை தெற்குத் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரின் குடும்பத்தினர் மதுரை சென்று திரும்பிய நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தவாரம் அம்மன் அர்ச்சுனனின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில், அவருக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 10 எம்.எல்.ஏ-க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கொரோனா இந்திய நிலவரம்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,315-லிருந்து 6,73,165 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உலக அளவில் தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை இந்தியா நெருங்குகிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவைவிட 800 பேர் அதிகமாக ரஷ்யாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 613 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,268 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,083 ஆகவும் உயர்ந்துள்ளது.
Also Read: மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண் தேவதை’ மாதேஷ்!
கொரோனா உலக நிலவரம்
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,13,72,004 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 64,33,942 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,32,861 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஒரே நாளில் 45,182 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை
29,35,770 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம், இதனால் பலியானோர் எண்ணிக்கையும் 1,32,318 ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் 254 பேர் உயிரிழந்தனர்.
source https://www.vikatan.com/news/general-news/05-07-2020-corona-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக