Ad

புதன், 8 ஜூலை, 2020

Corona Live Updates: இந்தியாவில் 25,000-த்தை நெருங்கும் தினசரி பாதிப்பு! - 7.67 லட்சம் பேருக்குத் தொற்று

இந்தியாவில் 25,000-த்தை நெருங்கும் தினசரி பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா - கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,129 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,76,378 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,64,789 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read: கோவை: `கொரோனா கொல்லி' மைசூர்பா! - ஸ்வீட் கடைக்கு சீல்; உரிமமும் ரத்து

மகாராஷ்டிராவில் 2,23,724 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 1,23,192 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 9,448 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,55,405 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 70,25,062 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,51,184 ஆக உயர்ந்துள்ளது.

Corona

Also Read: கொரோனா: திங்களன்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்?

உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,58,734 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 61,650 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், பலி எண்ணிக்கை 882 அதிகரித்த நிலையில், பலியானோர் எண்ணிக்கையும் 1,34,854 ஆக உயர்ந்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/09-07-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக