Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

Corona Live Updates: `24 மணி நேரத்தில் 29,429 பேருக்குத் தொற்று!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,36,181 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 29,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா Swab test

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 582 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,309 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,92,032 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,19,840 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/1572020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக