Ad

ஞாயிறு, 26 ஜூலை, 2020

Corona Live Updates: `இந்தியாவில் 14 லட்சத்தை கடந்த பாதிப்பு!; உலகளவில் குணமடைந்தோர் 1 கோடி! - கொரோனா நிலவரம்

இந்தியாவில் 14 லட்சத்தை கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,453 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா - கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 708 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,771 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,17,568 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,18,867ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,00,47,304 ஆக அதிகரித்திருக்கிறது. 6,52,256 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா - உலகம்

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,71,839 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் 1,49,849 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/2772020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக