Ad

ஞாயிறு, 5 ஜூலை, 2020

கொரோனா: மூச்சுத்திணறல் - சிகிச்சை பலனின்றி விருதுநகர் தலைமைக் காவலர் உயிரிழப்பு!

Also Read: மூடப்பட்ட காவல் நிலையம், தீயணைப்பு நிலையம்! - கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மதுரை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கலங்கப்பேரியைச் சேர்ந்த 40 வயது தலைமைக் காவலருக்குக் கடந்த 2-ம் தேதி, திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.

corona death

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (05.07.2020) உயிரிழந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட சோதனைகளின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, அவர் பணிபுரிந்த காவல்நிலையத்தில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, பின்னர், மூடப்பட்டது.

Also Read: `எல்லோரையும் போல பயப்பட்டோம், ஆனால்?' - மதுரை கொரோனா வார்டை அசத்திய 3 சகோதரிகள்

காவல்நிலையத்தில் பணியாற்றியவர்கள், அவர் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் காவல்துறை தலைமைக் காவலர் உயிரிழந்திருப்பது, விருதுநகர் மாவட்டக் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே வருத்தத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/viruthunagar-police-head-constable-died-of-corona-infection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக