Also Read: ` உருவத்திலும் அளவிலும் மாறுபட்ட எலும்புகள்..!' - தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்திய கீழடி
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ளது கிண்ணிமங்கலம் கிராமம். இங்குள்ள ஏகநாதசுவாமி மடத்தில் உள்ள கல்தூண் ஒன்றை ஆராய்ச்சி செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், அதில் மிகவும் பழைமையான 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்தூணைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறும்போது, ``தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமிழி கல்தூண் ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில்,`ஏகன் ஆதன் கோட்டம்’ எனத் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே புள்ளிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது இந்தக் கல்தூண். மேலும், கல்தூணில் தமிழி எழுத்துகளைப் பார்ப்பது அரிது. அந்த வகையில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Also Read: `மதுரை பேரையூரில் கிடைத்த தொல்லியல் எச்சங்கள்!'- ஆச்சர்யம் தரும் வரலாற்றுத் தகவல்கள்
இதில், மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ள `கோட்டம்’ என்ற சொல், தமிழிலக்கியங்கள் தவிர்த்து தமிழி எழுத்தாக, கல்தூணில் கிடைத்திருப்பதுதான். மிகப்பழைமை வாய்ந்த கிண்ணிமங்கலம் கிராமத்தில், அகழாய்வு நடத்தினால், பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும்” என்றார்.
கல்தூண் மட்டுமல்லாமல், ஏகநாத சுவாமி கோயில் அருகே ஆய்வு செய்த ஆய்வாளார்களுக்கு, பழங்கால நாணயங்கள், ஐம்பொன்னால் செய்யப்பட்ட இசை வாத்தியம், மண் பானைகள், வேட்டைக் கருவிகள் கிடைத்துள்ளன.
அப்பகுதி மக்கள் கூறும்போது, ``எங்கள் கிராமத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால், கீழடி போன்ற ஒரு சங்ககால தமிழர்கள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்படும்” என்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/archaeology/old-stones-with-tamili-scripts-found-in-madurai-village
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக