Ad

வெள்ளி, 3 ஜூலை, 2020

கொரோனா:`துணைப் பதிவாளருக்குத் தொற்று!’ - மூடப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

கொரோனா ஹாட்ஸ்பாட்டாகத் தகிக்கும் வேலூர் மாவட்டத்தில், இன்று காலை நிலவரப்படி புதியதாக 103 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,842 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 19 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், காட்பாடியை அடுத்துள்ள சேர்க்காடு கிராமத்தில் இயங்கிவரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கொரோனாத் தொற்று காரணமாக நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.

வேலூர்

கடந்த சில தினங்களாகத் துணைப் பதிவாளர் ஒருவர் காய்ச்சல் அறிகுறியுடன் பல்கலைக்கழகத்துக்கு வந்திருக்கிறார். நேற்று முன்தினம் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துகொண்ட துணைப் பதிவாளருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, ரத்தினகிரி அருகே உள்ள சி.எம்.சி புதிய மருத்துவமனையின் கொரோனா வார்டில் அந்த துணைப் பதிவாளர் `அட்மிட்’ ஆனார்.

இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத் துணை வேந்தர் தாமரைச் செல்வியின் பரிந்துரையின் பேரில், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், துணைப் பதிவாளர், துறைத்தலைவர், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என 42 பேரும், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 90 பேரும் வீட்டிலிருந்தபடியே வரும் 17-ம் தேதி வரை பணிகளை மேற்கொள்ளலாம் என்று பதிவாளர் (பொறுப்பு) சையத் ஷஃபி அறிவித்துள்ளார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

அதன்படி, அனைத்துப் பணியாளர்களும் நேற்று முதல் பல்கலைக்கழகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்துவருகிறார்கள். துணைப் பதிவாளருடன் தொடர்பிலிருந்த ஊழியர்களுக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருவது, குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/tamilnadu/thiruvalluvar-university-has-been-closed-till-17th-due-to-infection-of-the-deputy-registrar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக