Ad

சனி, 18 ஜூலை, 2020

சென்னை: `3 மாதங்களாக வேலை இல்லை!' - கூலித் தொழிலாளியின் தற்கொலை முடிவு

திருச்சி மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர் குமரேசன். இவரின் மகன் காமராஜ் (42). இவரின் மனைவி மலர்கொடி (38). இவர்கள் சென்னை புழல் கதிர்வேடு, பாரதியார் தெருவில் வாடகை வீட்டில்குடியிருந்து வந்தனர். காமராஜ், மலர்கொடி தம்பதியிக்கு குமரன், மோகன்ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். ஊரடங்கு காரணமாக காமராஜுக்கு கடந்த 3 மாதங்களாக வேலை இல்லை. அதனால் வீட்டிலேயே இருந்துள்ளார். குடும்பச் செலவுக்கு பணமில்லாமல் இந்தக் குடும்பம் சிரமப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் மதுவுக்கு காமராஜ் அடிமையாகியுள்ளார்.

Also Read: வேலை இழப்பு... தப்பிக்கும் வழிகள்! - கொரோனாகால ஆலோசனைகள்..!

மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் காமராஜ், மனைவி மற்றும் மகன்களை அடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்தச் சமயத்தில் 17-ம் தேதி இரவு காமராஜ் குடும்பத்தினர் அனைவரும் தூங்கச் சென்றனர். அதிகாலையில் கண்விழித்த காமராஜ், கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அவருக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்த காமராஜ், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் சமையலறைக்குச் சென்று, அங்குள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த மலர்க்கொடியை அவரின் இளைய மகன் மோகன்ராஜ், பாத்ரூமுக்குச் செல்ல வேண்டும் என எழுப்பினார். கண்விழித்த மலர்கொடி, மகனை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கணவர், சமையலறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவரும் மகனும் அதிர்ச்சியடைந்தனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு மூத்த மகன் கண்விழித்துள்ளார்.

Also Read: `மே, ஜுனில் 35 சிறுமிகளுக்குத் திருமணம்!’ -வேலூர் ஊரடங்கு அதிர்ச்சி

பின்னர் மலர்க்கொடியும் அவரின் மூத்த மகனும் சேர்ந்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த காமராஜை கீழே இறக்கியுள்ளனர். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு காமராஜை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து காமராஜ், இறப்பு குறித்து புழல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், காமராஜின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காமராஜின் மனைவி மலர்க்கொடி கொடுத்த புகாரில், ``நான் கதிர்வேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்பரவு பணியாளராக வேலைபார்த்து வருகிறேன். என் கணவர் காமராஜ் கூலி வேலை செய்து வந்தார். ஊரடங்கில் வேலை இல்லாததால் வீட்டிலேயே இருந்தார்.

Also Read: சென்னை: இ-பாஸ் கிடைக்காமல் தவித்த மனைவி, மகள்! - தனிமையால் தற்கொலை முடிவெடுத்த முதியவர்

அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். என் கணவரின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த காமராஜ், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கதிர்வேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/labour-commits-suicide-in-puzhal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக