ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்:
தமிழகத்தில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவிகித இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இப்படி மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு, தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குது பற்றி 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/27-07-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக