கொரோனா பரவல் குறித்தும், நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டுவதற்கான உணவு குறித்தும் விவாதித்தப்பதற்காக, இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பானது, சர்வதேச அளவிலான காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியது. இதில் அமெரிக்க, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா அமைப்பினரும் இதில் கலந்துகொண்டார்கள்.
இதில் உரையாற்றிய இந்திய நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார், "இந்த இக்கட்டான நேரத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்வதே இந்த உலகைப் பாதுகாக்கும். இந்திய மக்கள், பாரம்பர்யமான இயற்கை வாழ்வியலோடு இணைந்து வாழ, முயற்சி செய்ய வேண்டும். பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் தவிர்த்து உணவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில் உலக நாடுகள் பலவும் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வளமான சமுதாயத்தை வளர்த்தெடுக்க, இயற்கையோடு இணைந்து வாழ்தலே சிறந்த வழி" எனத் தெரிவித்துள்ளார்.
ஆம், ரசாயன உரங்களாலும் பூச்சிக் கொல்லிகளாலும் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை உருவாகி, மக்களின் உடல் நலனைப் பாதிக்கிறது. இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்தால்தான் ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய முடியும் என இயற்கை ஆர்வலர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள்.
இந்தத் தருணத்தில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாழ்க்கையும், அவரது பங்களிப்பையும் இங்கே நினைவு கூரவேண்டியிருக்கிறது. இதற்காக, 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...' புத்தகத்தை இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறது விகடன். (இணைப்பு கீழே)
நூல் அறிமுகம்...
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர்.
'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்' இ-புக் இலவசமாக இங்கே > க்ளிக் செய்க... https://vikatanapp.page.link/NaanNammalvarPesugiraen
இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...' என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது.
இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் பொன்.செந்தில்குமார்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு 'பசுமை விகடன்' இதழில் தொடராக வரும்போதே, 'எப்போது புத்தகமாக வரும்?' என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது.
இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?
மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்' புத்தகம் இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறை:
உங்களது மொபைலில் Vikatan App-ஐ டவுன்லோடு செய்து, ரெஜிஸ்டர் பண்ணினால் போதும், இந்த இ-புத்தகத்தை முழுமையாக வாசிக்கலாம்.
நீங்கள் டவுன்லோடு செய்யும் இந்த இ-புத்தகம் விகடன் App-ல் உள்ள Library-ன் E-book பகுதியில் சேவ் ஆகியிருக்கும். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.
இந்த இ-புக் உடன், புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து தங்களைப் பதிவு செய்துகொள்பவர்கள் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கும் சலுகையும் பெறலாம். மேலும், விகடன் இதழ்களின் கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.
'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்' இ-புக் இலவசமாக இங்கே > க்ளிக் செய்க... https://vikatanapp.page.link/NaanNammalvarPesugiraen
source https://www.vikatan.com/news/miscellaneous/read-naan-nammalvar-pesugiraen-ebook-worth-rs240-for-free
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக