தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. முக்கியமாக, கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பரவலாகி வருகிறது. நீதிபதி, பெண் காவலர், மருத்துவப் பணியாளர்கள், அ.தி.மு.க எம்.எல்.ஏ, என்று அனைத்துத் தரப்பு மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Also Read: கோவை அதிர்ச்சி: செல்வபுரம் பகுதியில், ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
இதையடுத்து, கோவை கொடிசியா மையம், கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றால் பாதித்திருந்த கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் மற்றும் அவரது குடும்பத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கோவையில் நேற்று மட்டும் புதிதாக 98 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணபதி பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி கடந்த 1-ம் தேதி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சூலூர் பகுதியைச் சேர்ந்த 58 வயது ஆண் கடந்த 1-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் நேற்று உயிரிழந்துவிட்டார். மேலும், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயது ஆண் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
Also Read: கொரோனா: `8 மாநிலங்கள், 49 மாவட்டங்கள்; சமூக பரவல் இல்லை!’ - மத்திய சுகாதாரத்துறை
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த மூவர் ஒரே நாளில் உயிரிழந்ததன் மூலம், பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, கோவையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிட்டது.
இந்நிலையில், கோவையில் கொரோனா தொற்று பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும், இறந்தவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களில் வெளிப்படைத்தன்டை வேண்டுமென சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-98-positive-and-6-death-for-corona
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக