Ad

வியாழன், 2 ஜூலை, 2020

IndiaChinaFaceOff `மோதல் நடந்த எல்லைப் பகுதி’ -லடாக்கில் பிரதமர் மோடி

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை!

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்னை என்பது ஆண்டுகள் கடந்து தொடர் கதையாகிவருகிறது. என்றாலும், கடந்த மாதம் 15-ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

லடாக்

இந்தத் தாக்குதலில், இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தியத் தரப்பில் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகள் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

லடாக்கில் பிரதமர் மோடி

இந்தியாவில், சீனா தனது செயலிகள் மூலம் உளவுபார்ப்பதாகச் சொல்லி, 59 சீனப் பின்னணிகொண்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காலை திடீரென்று இந்தியா-சீனா வீரர்களுக்கு இடையே மோதல் நடைபெற்ற லடாக் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின்ராவத்துடன் லே பகுதிக்குச் சென்று ஆய்வுசெய்துவருகிறார்.

Also Read: டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - அடுத்து என்ன நடக்கும்?

இன்று அவர், லடாக் மோதலில் காயமடைந்த ராணுவ வீரர்களைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி, தற்போது லடாக்கின் நிமு-வில் உள்ளார். அவர், இன்று அதிகாலையில் அங்கு சென்றார். ராணுவம், விமானப்படை மற்றும் இந்தோ திபத்திய படையினருடன் கலந்துரையாடினார். இந்தப் பகுதி 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மோடியின் இந்த திடீர் விசிட், இந்திய சீன விவகாரத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Also Read: India-China Face-Off:`மே மாதம் முதலே பதற்றம்... காரணம் சீனா!' -இந்திய வெளியுறவுத்துறை



source https://www.vikatan.com/news/general-news/india-china-face-off-modi-in-ladakh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக