இந்தியாவில் 14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,85,522 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 705 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,85,577 ஆகவும் உயர்ந்துள்ளது.
Also Read: புதுச்சேரி: `எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!’ - மரத்தடியில் சட்டப்பேரவைக் கூட்டம்
கொரோனா - உலக நிலவரம்!
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,62,00,326 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 99,13,072 ஆக அதிகரித்திருக்கிறது. 6,48,440 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,15,709 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால், 1,49,398 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
Also Read: 444 கொரோனா மரணங்கள்... உண்மை என்ன?
source https://www.vikatan.com/news/general-news/26-07-2020-corona-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக