திருச்சி தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து, தங்கபாண்டி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று போதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் பேச்சுவார்த்தை முற்றிப்போய் கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரையும் விலக்கிவிட தங்கப்பாண்டி தம்பி சுரேஷ், அவர் மனைவி அஞ்சலி, மாரிமுத்துவின் சித்தி முத்துலட்சுமி ஆகியோர் முயற்சி செய்துள்ளனர்.
அப்போது முத்துலட்சுமிக்கு அடி விழுந்துள்ளது. மேலும், மாரிமுத்து மற்றும் தங்கபாண்டி ஆகியோர் தள்ளிவிட்டதில் முத்துலட்சுமி அருகிலிருந்த சிமென்ட் கட்டையில் போய் விழுந்துள்ளார். அதில் தலையில் பலத்த காயமடைந்ததில் அவருக்கு காதிலும் மூக்கிலும் ரத்தம் வந்துள்ளது.
அதனைப் பார்த்ததும், பதறிப்போனவர்கள் அவரை அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தில்லைநகர் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: திருச்சி: பிரதமர், முதல்வர் படத்துடன் விளம்பரம்! - கூட்டுறவுச் சங்கத்தின் பெயரில் மோசடி
இதுகுறித்து வழக்கை விசாரித்து வரும் போலீஸார் தரப்பில் பேசினோம். போதையால் ஒரு உயிர் பரிதாபமாகப் போயுள்ளது என்று பேசத் தொடங்கினார்கள். ``மாரிமுத்து, தங்கப்பாண்டி இருவருக்கும் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். இந்த சம்பவத்தின்போது இருவரும் தண்ணி அடித்திருந்த நிலையில் கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவரது உறவினர்கள் தடுத்திருக்கிறார்கள்.
இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது முத்துலட்சுமி என்ற பெண் நடுவில் சென்று சட்டைபிடித்து சண்டை போடாதவாறு தடுத்திருக்கிறார். போதையிலிருந்த இருவருமே கையை வைத்துத் தள்ளியிருக்கிறார்கள். நிலைதடுமாறியவர் அருகில் இருந்த சிமென்ட் கட்டையில் போய் மீது மோதியிருக்கிறார். பின்புறம் தலையில் பலத்த அடிப்பட்டு இறந்திருக்கிறார். தங்கப்பாண்டி மற்றும் அவரது உறவினர் 7 பேரை பிடித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றோம். அத்தோடு இவர்கள் தண்ணியை போட்டு இருவரும் அடித்த கூத்தால் பரிதாபமாக ஒரு உயிர் போயிருக்கிறது” என்றார்.
Also Read: சென்னை:`டயர் தொழிற்சாலை இடப்பிரச்னை!' - ரியல் எஸ்டேட் அதிபர் கொடூர கொலை
source https://www.vikatan.com/news/crime/women-died-while-trying-to-stop-the-fight-between-two-men
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக