'' 'மாஸ்டர்' இசைவெளியீட்டு விழால நீங்க கடவுள் பத்திப் பேசின பேச்சு சர்ச்சையாச்சு. நீங்க உண்மையிலேயே கடவுள் மறுப்பாளரா?''
“இல்லை. என் வீட்டுலயும் ஆபீஸ்லயும் முருகன் இருப்பார். தன் பிள்ளை எங்கேயாவது வெளில வேலைக்குப் போகுதுன்னா, தன் சாமியும் கூடப் போகும்னு அம்மா நம்புவாங்க. இந்த நம்பிக்கைதான் மனுஷனின் முக்கியமான ஆறுதல். இதோட சேர்த்து எனக்கு மனிதநேயம், மனிதாபிமானம் ரெண்டும் ரொம்ப முக்கியம். மனிதனைத்தான் நான் ரொம்பப் பிரதானமா பார்க்குறேன்.
எங்க அம்மா படிக்காதவங்க. மாரியம்மன் கோயிலுக்குத் தீ மிதிச்சிருக்காங்க. வேண்டியிருக்காங்க. 'தன் பிள்ளைகள் எப்படியாவது மேல வந்துடாதா, இந்த வறுமையை ஜெயிச்சுட மாட்டோமா, நிம்மதியா வாழ்க்கையை வாழ்ந்துட மாட்டோமா'ன்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இப்போ நான் அம்மாகிட்ட பேசுறப்போகூட, 'இன்னைக்கு நான் இப்படியிருக்குறதுக்கு உன்னோட பிரார்த்தனைதான் முக்கியமான காரணம். ஆனா, இதுக்கு மேலேயாவது நீ நிம்மதியா இரு'ன்னு சொல்லுவேன். எங்க அம்மா மட்டுமல்ல, எல்லா அம்மாக்களின் பிரதான நம்பிக்கையும் இதுதான். இதை உடைக்குறது என்னோட நோக்கம் இல்ல.''
''ஷூட்டிங் இல்லாத இந்த லாக்டெளன் நாள்களில் உங்க பொழுதுபோக்கு என்ன?''
'' 'முதல் மரியாதை', 'கரகாட்டகாரன்', 'வேதம் புதிது' படமெல்லாம் பத்து முறை பார்த்துட்டேன். பார்க்கப் பார்க்க ரொம்பப் பிடிச்சது. தொடர்ந்து மூணு நாள் 'கரகாட்டகாரன்' பார்த்துக்கிட்டே இருந்தேன். இந்தப் படத்துல பெரியகருப்பு தேவர் நடிச்சிருப்பார். இவரோட பையன் விருமாண்டிதான் 'க/பெ ரணசிங்கம்' படத்தோட இயக்குநர். அவருக்கு போன் அடிச்சு, 'தலைவா, கரகாட்டக்காரன் ஷூட்டிங் ஸ்பாட்டு போயிருந்தீங்களா'ன்னு கேட்டேன். 'போயிருந்தேன்'னு சொன்னார். 'போன அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க, கேட்க எனக்கு ஆசையாயிருக்கு'ன்னு பேசிட்டிருந்தேன்.
“துளிகூட நல்லவன் இல்லை!” - விஜய்சேதுபதி சொல்லும் 'மாஸ்டர்' ரகசியம் https://bit.ly/2W2lRe1
எல்லோரும் சொன்ன 'Money Heist' பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. தினமும் ஒரு படம் பார்க்குறேன். எங்க டைரக்டர் சீனு ராமசாமி மற்றும் குமாரராஜா சொன்ன படங்கள் பார்த்தேன். இப்படி யாருகிட்டயாவது கேட்டுக் கேட்டு படங்கள் பார்த்துக்கிட்டிருக்கேன். சமீபத்துல, மலையாளப் படம் 'கப்பெல்லா' பார்த்தேன். ரொம்ப நல்லாருந்தது. 'கடசீல பிரியாணி'ன்னு ஒருத்தருடைய படம் பார்த்தேன். இன்னும் ரிலீஸாகல. பிரமாதமா இருந்தது.
என்னோட 'கடைசி விவசாயி' படத்தை நாலுமுறை பார்த்தேன். பார்த்துக்கிட்டே இருக்கணும்னு தோணுச்சு. என்னோட நடிப்பையெல்லாம் தாண்டி படத்துல நடிச்சிருக்குற பெரியவருடைய நடிப்பு, காட்டியிருக்குற வாழ்க்கை ரொம்பப் பிரமாதமா இருக்கு. இந்தப் படத்துல நடிச்சதுக்காக ரொம்பப் பெருமைப்படுறேன். இதைக் கடவுளோட ஆசீர்வாதமா பார்க்குறேன். செம படம் இது. எல்லாம் சரியானதும் தியேட்டருக்கு வந்துடும்.''
- ''லாக்டெளன் கொடுமையா போயிட்டிருக்கு. எப்போ வேலைக்குப் போவேன்னு இருக்கு. உடம்பைப் பாதுகாக்குறதா இல்ல, மனசைப் பாதுகாக்குறதான்னு தெரியல. உடம்பைப் பாதுகாக்கலாம்னு பார்த்தா மனசு ரொம்ப உடைஞ்சுபோகுது. எனக்கே இந்த நிலைமைனா எளிய மக்களோட நிலைமை ரொம்ப மோசம்.
நான் மிடில் க்ளாஸ் வாழ்க்கையில இருந்தப்போ மாசக் கடைசில குடும்பம் நடத்துறது கஷ்டமா இருக்கும். இப்போ, மாச வருமானம்னு ஒண்ணே இல்லாம இருக்குறப்போ எப்படியிருக்கும்? இதைப் பெரிய பேரிடரா, பெரும் துயரமா பார்க்குறேன்'' என்று வேதனைப்படும் விஜய்சேதுபதியின் முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க இங்கே க்ளிக் செய்க... > “துளிகூட நல்லவன் இல்லை!” - விஜய்சேதுபதி சொல்லும் 'மாஸ்டர்' ரகசியம் https://bit.ly/2W2lRe1
* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.
Also Read: “துளிகூட நல்லவன் இல்லை!”
சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV
source https://cinema.vikatan.com/tamil-cinema/vijay-sethupathi-speaks-about-his-belief-on-god-and-spirituality
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக