வெளிநாட்டில் இருந்து கொண்டு வாட்ஸ்அப் மூலம் ராமேஸ்வரம் கோயில் மற்றும் ஏர்வாடி தர்ஹா ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி மீது ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்டத்தில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக கைப்பேசி எண்ணை அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
Also Read: ’கந்துவட்டிக் கும்பலுக்குத் துணைபோகும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை’: ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை
இந்த எண் வழியாக வரப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பல்வேறு சமூக விரோதக் கும்பல்கள் கைது செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக கைப்பேசி எண்ணுக்கு சில ஆபாசப் படங்கள் வந்துள்ளன. இவற்றை அனுப்பிய நபர் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு கைப்பேசி எண்களில் இவற்றை அனுப்பியுள்ளார். மேலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஏர்வாடி தர்ஹா ஆகியவற்றில் குண்டு வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து ஆபாசப் படங்கள் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய நபர் குறித்து மாவட்ட கண்காணிப்பாளரின் பாதுகாவலர் கலைவாணன் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், குவைத்தில் வசித்து வரும் ராஜா என்பவர் இச்செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், தொடர் விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.
Also Read: லஞ்சம் வாங்கிய எழுத்தர்; ஜீப்பில் இருந்தபடியே பதிவுசெய்த போலீஸ்! -தண்டனை கொடுத்த ராமநாதபுரம் எஸ்.பி
source https://www.vikatan.com/news/crime/ramanathapuram-police-filed-complaint-against-kuwait-person
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக