கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நீலகிரியில் தற்போது 500 -ஐ கடந்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரம் முழுக்க உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாகக் குறைந்தது. இது சற்று நிம்மதியளித்த, நிலையில் நேற்று மீண்டும் 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஊட்டி காந்தள், குன்னூர் உள்ளிட்ட நகர், நகரையொட்டியுள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டாலும், தற்போது கிராமப் பகுதிகளில் அசுர வேகத்தில் தொற்று பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக, படுகர் இன மக்கள் வசிக்கக்கூடிய (ஹட்டி) கிராமங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
நீலகிரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல் குறித்து நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர், ``எல்லநள்ளி ஊசி தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அலுவலருக்கு ஏற்பட்ட தொற்றால் அங்கு பணிபுரிந்த 750 ஊழியர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டோம், அதில் 115 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோல், குந்தா தங்காடு பகுதியில் நடைபெற்ற அலட்சிய திருமணம், ஒரு நபர் மூலம் 200-க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அலட்சியமாகச் செயல்பட்டவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. இதில், 371 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
இது குறித்து ஊட்டி பகுதியில் வசிக்கும் படுகர் இனத்தைச் சேர்ந்த சிலர், ``எங்கள் இன மக்கள் மிகவும் சமூக பிணைப்பைக் கொண்டவர்கள். திருமணம், திருவிழா, இறுதிச்சடங்கு போன்றவற்றில் அதிகளவில் மக்கள் கூடுவது வழக்கம்.
கொரோனா பிரச்னை முடியும் வரை சற்று விலகி இருப்பதே நல்லது" என்கின்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/corona-virus-spreading-in-nilgiri-tribes-area
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக