சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள், ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ், ஜெயராஜின் உறவினர்கள், அவரது கடைக்கு அருகில் கடை நடத்திவரும் வியாபாரிகள், பென்னிக்ஸ் நண்பர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read: "நீங்கள் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர்!"- சிறைக்குள்ளும் தொடரும் சாத்தான்குளம் ஸ்ரீதரின் அத்துமீறல்
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஐந்து பேரும் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மதுரை சிறைச்சாலைக்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்டபோது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸிடம் ஸ்ரீதர், செல்போன் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே, `நான் உன் அதிகாரி. எனக்கே போன் தரமாட்டேன்னு சொல்லிட்டே இல்ல... உன்னை கவனிச்சுக்கறேன்” எனக் கடிந்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.
மதுரைக்கு வாகனத்தில் போகும்போது பாதுகாப்புக்கு வந்த காவலரைத் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி திட்டியபடியே சென்றுள்ளார். அதைக் கவனித்த வேனில் இருந்த பாதுகாப்பு அதிகாரி, `கைதியா இருந்தாலும் ஏற்கெனவே காக்கிச் சட்டை போட்டிருந்த காரணத்துகாக சும்மா விடுறேன். இனியும் பேச்சு கேட்டுச்சுன்னா சும்மா இருக்க மாட்டேன்’ என மிரட்டிய பின்னரே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அமைதியாகியிருக்கிறார்.
Also Read: சாத்தான்குளம்: `அப்செட்' எஸ்.ஐ; தனித்தனி பிளாக்! - சிறைக் கெடுபிடியால் தவிக்கும் இன்ஸ்பெக்டர்
சிறைக்குள் சென்ற பின்னரும் அவர் இன்ஸ்பெக்டர் தோரணையிலேயே இருப்பதாகச் சொல்கிறார்கள், சிறைத்துறையினர். உணவு கொடுக்கும்போது, `சாம்பார் சரியில்லை... சாப்பாடு சரியில்லை’ என்று கொந்தளிக்கிறாராம்.
ஸ்ரீதர் மற்றும் அவருடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் சமாதானப்படுத்தியபோதும் ஸ்ரீதர் மட்டும் அடிக்கடி டென்ஷன் ஆகிறாராம். மதுரை மத்திய சிறையின் உள்ளே இருக்கும் இணைப்புக் கட்டடத்தில் ஐந்து பேரும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பகுதிக்குச் சிறையின் மற்ற கைதிகள் செல்ல முடியாது.
வழக்கமாக கல்லூரி மாணவர்கள் அல்லது சமூகத்தின் நல்ல நிலையில் இருப்பவர்கள் சந்தர்ப்பச் சூழலில் ஏதாவது வழக்கில் சிக்கினால் பிற குற்றவாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த பிளாக்கில் அடைப்பார்களாம். அதில்தான் ஐந்து பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் தனி அறை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட, சிறைக்குள் ருசியான உணவு கிடைக்கவில்லை என்கிற கவலை ஸ்ரீதருக்கு அதிகமாக இருப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள் சிறைத்துறையினர்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/sathankulam-custodial-deaths-case-inspector-sridhar-clashes-with-official-over-food-sources
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக