Ad

புதன், 15 ஜூலை, 2020

கடிதங்கள்

லையங்கம் ‘நச்’சென்று இருந்தது. கடைக்கோடி சாமானியன் வரை பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இதே போன்று நீதி கிடைக்க வேண்டும். அதற்கு விகடன் என்றும் துணை நிற்பான் என்பதில் ஐயமில்லை.

- வெ.ராமானுஜம்

‘அத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்?’ கட்டுரை அருமை. ‘பொறுக்கி’ போலீஸ் திரைக்கதை உள்ள படங்களை மக்கள் ஆதரிக்காமல் இருந்தாலே நல்ல மாற்றம் வரும்.

- வேலன்

சினிமாவுக்குள் மூழ்கியிருந்தாலும், சினிமாத்தனத்தைத் தனக்குள் படரவிடாமல் தொடரும் ஒரு மகா நடிகன்... உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், அடுத்த வீட்டு நண்பனாய்ப் பழகும் ஒரு மகா மனிதன் இந்த விஜய் சேதுபதி.

- சரவண பாண்டியன்

‘தொழில் வேற, உறவு வேற என்கிற புரிதல் எங்க ரெண்டு பேருக்குமே உண்டு’ என்று விஜயைக் குறித்துச் சொல்லியிருக்கும் திரு. சேவியர் பிரிட்டோ, அடுத்த வரியிலேயே, ஒரு ஷாட் முடிஞ்சதும் ‘அங்கிள் நீங்க ஹேப்பியா, உங்களுக்கு ஓகேவா’ன்னு கேட்டுட்டே இருப்பார்னும் சொல்றார். குட்!

- அஜித்லால்

ண்மையிலே நன்கு உழைத்திருக்கிறார்கள் டார்க் வெப் சீரிஸின் திரைக்கதையை அமைக்க. நிறைய ரிசர்ச் செய்திருக்கிறார்கள். சில இடங்களில் நிறுத்திப் பார்த்து யோசித்துப் புரிந்துகொள்ள வேண்டியது உள்ளது.

- சௌமி



source https://www.vikatan.com/literature/letters/letters-22nd-july-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக