சாத்தான்குளம் விவகாரத்தில் காவலர்களின் உண்மை முகங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. சாத்தான்குளம் காவலர்கள் மட்டுமல்லாமல் இப்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காவலர்களின் பின்புலத்தையெல்லாம் அலசியது ஜூ.வி. கிடைத்த தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம்.
ஏகப்பட்ட சர்ச்சைகளையும் குற்றச்சாட்டுகளையும் கொண்ட இவர்களா சாத்தான்குளம் விவகாரத்தில் நீதி கிடைக்க ஒத்துழைப்பார்கள் என்கிற சந்தேகம் ஏற்படு வதையும் தவிர்க்க முடியவில்லை. 'யோக்கியன் வர்றான்... சொம்பை எடுத்து உள்ளே வை' என்று ஒரு சொலவடை இருக்கிறது. அது நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.
அனில்குமார் நேர்மையைச் சந்தேகிக்கும் வழக்கறிஞர்!
''பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கண்ணீரை மனதில்கொண்டு, நெல்லை சி.பி.சி.ஐ.டி-யின் டி.எஸ்.பி-யான அனில்குமார் விசாரணை நடத்த வேண்டும்” என நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், அவர்மீதும் அதிருப்தி நிலவுகிறது. தன்னுடைய புகார் குறித்த விசாரணையை இரண்டு வருடங்களாக சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி-யான அனில்குமார் இழுத்தடித்து வருவதாகக் குற்றம்சாட்டுகிறார், தட்டார்மடம் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான பெரியசாமி.
இது பற்றி அவர் கூறுகையில், ''நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக நானும் புகார்தாரரும் தட்டார்மடம் காவல்நிலையத்துக்குச் சென்றோம். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் என்பவர் எங்கள் புகாரைப் பதிவுசெய்ய மறுத்தார். நான் அவரிடம், 'புகாரைப் பெற்றுக்கொண்டு ரசீது கொடுங்க சார்' என்றதும் ஆத்திரமடைந்த அவர், 'என்னையே எதிர்த்துப் பேசுறியா... வக்கீல் என்றால் பெரிய இவனா' என்று கேட்டபடியே கொடூரமாகத் தாக்கினார்.
என் உடல் முழுவதும் ரத்தம் கொட்டியது. ஆத்திரம் தீர அடித்து முடித்த சுந்தரம், 'இதே கோலத்துல நீ என்னோடு ஒரு செல்ஃபி எடுக்கணும். அதை உன்னோட ஆபீஸ்ல மாட்டி வைக்கணும். அதைப் பார்க்கும்போதெல்லாம் உனக்கு என் நினைப்பு வரணும்' என்று என்னைக் கட்டாயப்படுத்தி செல்ஃபி எடுக்க வைத்தார்.
கவர்ஸ்டோரியை விரிவாக வாசிக்க க்ளிக் செய்க... > “உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!” - காக்கிகளின் கலவரமூட்டும் மறுபக்கம் https://bit.ly/38qLVV1
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை, தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் ஆறு வார காலத்தில் அறிக்கை கேட்டிருந்த நிலையில், விசாரித்து அறிக்கை தர வேண்டிய டி.எஸ்.பி அனில்குமார் இரண்டு வருடங்களாக அறிக்கை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்துவருகிறார். அவர் எப்படி சாத்தான்குளம் வழக்கில் நேர்மையாகச் செயல்பட்டு விரைவாக விசாரணையை முடிப்பார்?'' என்று சந்தேகம் கிளப்புகிறார்.
'குட்கா' புகழ் ஜெயக்குமார்
தூத்துக்குடி எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமார், சென்னை காவல்துறையில் ரௌடிகள் ஒழிப்பு பிரிவு துணை ஆணையர், விழுப்புரம் எஸ்.பி எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர். சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவருக்கு அத்துப்படி என்பதால்தான் ஜெயக்குமார் பெயரை டி.ஜி.பி திரிபாதி டிக் செய்தாராம்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் துணை ஆணையராக ஜெயக்குமார் பணிபுரிந்தபோது தான் குட்கா விவகாரம் வெடித்தது. தற்போது சி.பி.ஐ விசாரணையிலுள்ள இந்த வழக்கில், நான்கு முறை ஜெயக்குமார் ஆஜராகியுள்ளார். வழக்கில் சி.பி.ஐ தரப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, ஜெயக்குமார் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கலாக முகாந்திரம் உள்ளது.
ஆகக்கூடி தேடித் தேடிப் பிடித்துத்தான் சாத்தான்குளம் விவகாரத்தை விசாரிக்கும் பணியிலும், அதை மேற்பார்வையிடும் பணியிலும் நியமித்துள்ளனர். ஆனால், '`இவர்கள் ஒவ்வொருரின் வண்டவாளத்தையும் பார்க்கும் போது, நிச்சயமாக நீதி கிடைக்காது என்பது இப்போதே தெரிகிறது'' என்று கவலை பொங்கச் சொல்லும் தன்னார்வலர்கள் சிலர்,
இவர்களுடன்...
> மாஜிஸ்ட்ரேட்டை அவதூறாகப் பேசிய மகாராஜன்!
> சர்ச்சைகளைச் சட்டை செய்யாத ஏ.எஸ்.பி குமார்!
> சர்ச்சை இன்ஸ்பெக்டர் ஃபெர்னார்டு சேவியர்!
> அசட்டையாக இருந்த அருண்பால கோபாலன்!
> சாத்தான்குளத்தை விரும்பிக் கேட்ட பிரதாபன்!
> பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஐ.ஜி முருகன்!
இவர்களின் பின்னணியையும் விரிவாகச் சொல்லி, காவல்துறையின் உண்மை முகத்தைக் காட்டும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை விரிவாக வாசிக்க க்ளிக் செய்க... > “உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!” - காக்கிகளின் கலவரமூட்டும் மறுபக்கம் https://bit.ly/38qLVV1
* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.
Also Read: “உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!” - காக்கிகளின் கலவரமூட்டும் மறுபக்கம்...
சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/news/crime/allegations-on-tirunelveli-cbcid-dsp-anil-kumar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக