Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

`டெத் சர்ட்டிபிகேட் கொடு லோனை முடிச்சுக்கலாம்!’- ஃபைனான்ஸ் நிறுவனம் மீது விவசாயி புகார்

``நீ வாங்கிய லோண்னை முடிக்கனும்னா, நீ செத்துட்டேனு உன்னோட டெத் சர்டிபிக்கேட்டை கொடு. லோனை குலோஸ் பண்ணிடலாம்" என்று ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் விவசாயிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார்கள். அத்தோடு, அவரை தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருப்பதால், வேதனை தாங்கமுடியாமல் காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் திருச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி

திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அருகே குருவம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம். இவர், திருச்சி தில்லைநகரில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தில், தனது டிராக்டர் ஆவணங்களை வைத்துக் கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,90,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை மூன்று தவணையாக 90,000 ரூபாயை பைனான்ஸ் நிறுவனத்தில் முருகானந்தம் செலுத்தியுள்ளார். கொரோனா விவகாரத்தில் கடந்த நான்கு மாதங்களாக வருவாய் இன்றி தவித்த நிலையில் மீதி 1 லட்சம் ரூபாயைச் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் வாங்கிய கடன் தொகையைக் கட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு வந்தும், சில நிதி நிறுவனங்கள் மிரட்டல் விடுத்து பணத் தொகையை வசூல் செய்து வருகின்றனர். தில்லை நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனமானது, கடந்த சில நாள்களாகவே முருகானந்தத்தை கடன் தொகையைக் கேட்டு பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

முருகானந்தம்

காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள விவசாயி முருகானந்ததிடம் பேசினோம். ``கடந்த 2019ம் ஆண்டு விவசாய பயன்பாட்டுக்காக கடன் வாங்கி டிராக்டர் வாங்கினேன். அதுவும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரூ.31,500, 12 மாதத்துக்குள் கட்டவேண்டும் என்று சொன்னார்கள். நான் மூன்று தவணைகள் கட்டிவிட்டேன். கொரோனா விவகாரத்தால் சரியான வேலை இல்லாததால் கையில் பணம் இல்லை. இந்நிலையில், மத்திய அரசு சொன்னதுபோல் லாக்டவுன் முடிந்ததும் பணம் கட்டுகிறேன் என்று ஃபைனான்ஸ் கம்பெனில எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன்.

Also Read: `பெண் பார்க்க வீட்டுக்கு வந்தார்கள்!' - மிரட்டல் கும்பல் அதிர்ச்சி; மீளாத நடிகை பூர்ணா

ஆனால், அவுங்க பணத்தைக் கட்டச்சொல்லி தினந்தோறும் டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வேலைக்குப் போனதும் பணத்தை கட்டிவிடுகிறேன் என்று பலமுறை சொல்லி பார்த்துவிட்டேன். அப்படியிருந்தும் அவர்கள் கேட்டபாடில்லை. இந்நிலையில், ஃபைனான்ஸ் கம்பெனில இருந்து ஒரு மெசேஜ் வந்துச்சி. அதுல, `நீ வாங்கிய லோனை முடிக்கனும்னா, நீ செத்துட்டேனு உன்னோட டெத் சர்டிபிக்கேட்டை கொடு.

விவசாயி முருகானந்தம்

லோனை குலோஸ் பண்ணிக்கிடலாம்’ என்று அதிகாரிகள் என்னோட செல்லுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புனாங்க. அத்தோடு அக்கம்பக்கத்தில் உள்ள எங்களது உறவினர்களிடம் என்னைப் பற்றித் தரக்குறைவாக சொல்லியிருக்காங்க. இதுக்கும்மேல இவுங்க டார்ச்சர் தாங்க முடியாமல் வாத்தலைக் காவல்நிலையத்தில் சோழமண்டலம் பைனான்ஸ் மீது புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/farmer-files-complaint-against-trichy-private-finance-company

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக