Ad

ஞாயிறு, 26 ஜூலை, 2020

நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? - மாவட்ட ஆட்சியர்களுடன் ஜூலை 29-ல் முதல்வர் ஆலோசனை #NowAtVikatan

மாவட்ட ஆட்சியர்களுடன் ஜூலை 29-ல் முதல்வர் ஆலோசனை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்குப் பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தெரியவரும்.

Also Read: "பொருளாதாரம் முக்கியம்!"- கர்நாடக ஊரடங்கு நீக்கம்... தமிழகத்திலும் செய்யலாமா? #VikatanPollResults

இலவச மாஸ்க் திட்டம்!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் இலவச மாஸ்க் விநியோகிக்கும் திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதைத் தொடங்கி வைக்கிறார்.

Also Read: வால்வ் வைத்த மாஸ்க் ஆபத்தானது... ஏன்? - தொற்றுநோயியல் மருத்துவர் விளக்கம்



source https://www.vikatan.com/news/general-news/26-07-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக