Ad

செவ்வாய், 7 ஜூலை, 2020

சாத்தான்குளம்: 2 மணிநேரத்துக்கு மேல் விசாரணை! - மேலும் 5 காவலர்கள் கைது #NowAtVikatan

சாத்தான்குளம் வழக்கில் மேலும் 5 போலீஸார் கைது!

சாத்தான்குளம் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் தாக்கியதாலேயே அவர்கள் மரணமடைந்தததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதை ஏற்ற நீதிமன்றம், அதுவரை சிபிசிஐடி போலீஸார் வசம் விசாரணையை ஒப்படைத்தது. இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் உள்ளிட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ஜெயராஜ், பென்னிக்ஸ்

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளதாகத் தமிழக அரசு, நேற்று தெரிவித்திருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்புகொண்டு பேசியிருந்தார். இந்தநிலையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மேலும் 5 போலீஸாரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலையம்

Also Read: "நீங்கள் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர்!"- சிறைக்குள்ளும் தொடரும் சாத்தான்குளம் ஸ்ரீதரின் அத்துமீறல்

சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் வேல்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து மற்றும் தாமஸ் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது, அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/08-07-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக