நீலகிரி தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பழைமையான பழப்பண்ணைகளில் ஒன்றாக குன்னூர் பழவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பேரிக்காய், பிளம்ஸ், ஆப்பிள், பீச், ஆரஞ்சு மற்றும் பெர்சிமென் ஆகிய பழ மரங்கள் பராமரிக்கப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது.
Also Read: `செடிகளை ஒட்டு முறையில் வளர்ப்பது எப்படி?'- தோட்டக்கலை பண்ணைக்குச் சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்
இங்கு விளையக்கூடிய பழங்களைக்கொண்டு ஜாம், ஜெல்லி, ஜூஸ் போன்றவை தயாரிக்கப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும், பெருமளவு பரப்பளவு கொண்ட குன்னூர் பழவியல் மையத்தில் பல ஏக்கர் நிலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் களமிறங்கியுள்ளனர்.
Also Read: தினமும் நல்ல வருமானம் நிச்சயம்... ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்வது எப்படி?
ஸ்ட்ராபெர்ரி உற்பத்தி குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர்,``கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஸ்ட்ராபெர்ரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பல காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஸ்ட்ராபெர்ரி உற்பத்தி செய்ய முடிவு செய்து, முதல் கட்டமாக 1,000 நாற்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம். இந்த முயற்சி பலனளித்தால், அதிக பரப்பளவில் பயிரிட உள்ளோம். மேலும் விவசாயிகளுக்கும் பரிந்துரைக்க உள்ளோம்" என்றார்.
தோட்டக்கலைத்துறையின் இந்த முயற்சி பல புதிய ஸ்ட்ராபெர்ரி உற்பத்தியாளர்களுக்கும் வழிகாட்டுதலாக அமையும் என உள்ளூர் மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/nilgiri-horticulture-department-cultivate-strawberry-after-10-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக