Ad

வியாழன், 16 ஜூலை, 2020

`இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’ - சுனாமி எச்சரிக்கை! #NowAtVikatan

இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவானது. எனினும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 7.2 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதாகத் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் சுற்றளவு வரையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகப் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துய்ள்ளது. இந்தத் தகவலை ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



source https://www.vikatan.com/news/general-news/17-07-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக