Ad

வெள்ளி, 24 ஜூலை, 2020

Corona Live Updates: `ஒரே நாளில் 48,916 பேருக்கு தொற்று!’ - இந்தியாவில் 13 லட்சத்தை கடந்த பாதிப்பு

இந்தியாவில் 13 லட்சத்தை கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,36,861 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 757 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,358 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,49,432 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்

Also Read: "15 அடிக்கு குழிதோண்டி, அதில் 200 கிலோ சுண்ணாம்பு போடுவோம்!" - கொரோனா தன்னார்வலர்களின் சேவைப் பணி

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,57,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,99,967ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,132 ஆகவும் உள்ளது



source https://www.vikatan.com/news/general-news/2572020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக