Ad

புதன், 22 ஜூலை, 2020

Corona Live Updates: 24 மணிநேரத்தில் 45,720 பேருக்குத் தொற்று - இந்தியாவில் 12 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் 12 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,39,684 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 45,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,861ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,53,050 ஆகவும் உயர்ந்துள்ளது.

Also Read: கொரோனா: `தமிழகத்தில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444’ - மருத்துவர் குழு அறிக்கை தாக்கல்

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,53,71,836 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 93.43 லட்சமாக அதிகரித்திருக்கிறது. 6.29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Corona Tests

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 41,00,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 71,501 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

Also Read: கொரோனா: `வெட்ட வெளியில் மருத்துவக் கழிவுகள்; இழுத்துச் செல்லும் குரங்குகள்!' - அச்சத்தில் ஊட்டி



source https://www.vikatan.com/news/general-news/23-07-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக