Ad

புதன், 22 ஜூலை, 2020

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து! - முதல்வர் உத்தரவு #NowAtVikatan

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து!

கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகள் தவிர மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

மாணவர்கள்

கொரோனா முழு ஊரடங்கால் தமிழகத்தில் ஏற்கெனவே 10-ம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. அதேபோல், சி.பி.எஸ்.இ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில், பொறியியல் மற்றும் கலை அறிவியல் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read: `கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம்!’ - மத்திய அரசு அறிவிப்பு

முதல்வர் அறிக்கை

இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

Also Read: +2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கலாம்? #VikatanPollResults



source https://www.vikatan.com/news/general-news/23-07-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக