Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

கரூர்: ஊறு விளைவிக்காத ரசாயனம்; பருத்தியில் கவச உடை! - கொரோனா தடுப்பில் புது முயற்சி

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு, கொரோனாவில் இருந்து பாதுகாக்க ஏதுவாக பருத்தியில் தயாரான பாதுகாப்பு உடையை, இந்தியாவிலேயே முதன்முறையாக கரூரில் தயாரித்து அசத்தியிருக்கிறார்கள்.

பாதுகாப்பு உடைகள் தயாரிப்பில்...

Also Read: குளித்தலை: `என் குழந்தைங்க இனி நல்ல சாப்பாடு சாப்பிடப்போறாங்க!' - நெகிழும் அருள்ராஜ்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகையே துவம்சம் செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவில், அதன் தாக்கம் நாளுக்குநாள் கூடிக்கொண்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், அதன் தாக்கம் குறையவில்லை. மருத்துவர்களும் பணியாளர்களும், சுகாதாரத்துறையினரும் கொரோனாவைத் தடுக்க, தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

மூன்று அடுக்கு மாஸ்க்

அப்படி, கொரோனா நோயாளிகளின் அருகில் இருந்து பணிபுரியவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு, பருத்தியில் பாதுகாப்பு உடைகள் தயாரித்து அசத்தியுள்ளது, கரூரில் உள்ள மருத்துவ பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று.

அபினோ பாப்ரிக்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளரான நல்லமுத்துவிடம் பேசினோம்.

"எங்கள் நிறுவனம் சார்பில், கடந்த 15 வருடங்களாக மருத்துவமனைகளுக்குத் தேவையான துணி பொருள்களை தயாரித்து வருகிறோம். அதோடு, மருத்துவர்களுக்கு தேவையான பி.பி.இ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தநிலையில்தான், கொரோனா தாக்கம் அதிகமாகி, அதிகமான கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்க வேண்டிய சூழல் எற்பட்டது. வழக்கமான உடைகள் இப்போது சரிவராது. கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவப் பணியாளர்கள் ஏ.சி அறைகள் இல்லாத இடத்திலும், பணிசெய்ய வேண்டிய நிலைமை.

நல்லமுத்து

மருத்துவர்கள் மட்டுமன்றி, மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பு கவச உடையை அணியவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் அணிந்துகொள்ள வசதியாக பருத்தியில் ஆடை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளோம். இந்தியாவிலேயே பருத்தியில் பாதுகாப்பு உடை தயாரித்தது நாங்கள்தான். ஸ்விட்சர்லாந்தில் இருந்து பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்ககூடிய ரசாயனத்தை இறக்குமதி செய்கிறோம். அந்த ரசாயனம் உடலுக்கு அதிக ஊறு செய்யாதது. பருத்தி துணிகளில் நவீன தொழில்நுட்பத்தில் அந்த ரசாயனம் கலந்து, சாயமேற்றப்படும்.

Also Read: முதல்முறையாக மாஸ்க் அணிந்த டொனால்டு ட்ரம்ப்! #PhotoOfTheDay

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் துணியைக் கொண்டு, மருத்துவ பாதுகாப்பு உடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உடையை 25 முறை துவைத்து உபயோகப்படுத்த முடியும். அதன்பிறகு, சாதாரண ஆடையாக பயன்படுத்தலாம். மற்ற மருத்துவ பாதுகாப்பு உடைகள் போல் இல்லாமல், உடலுக்கு தீங்கு செய்யாமல், இந்த உடை 99.99 சதவிகித வைரஸை அழித்துவிடும். சென்னை, மும்பை பகுதிகளில் உள்ள இரண்டு ஆய்வகங்களில் இதை உறுதிசெய்து, சான்றிதழ் பெற்று இருக்கிறோம். அதேபோல், இந்த உடையை சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாமல் அப்புறப்படுத்தவும் முடியும். முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டும் இந்த உடையைத் தயாரித்தோம்.

மூன்று அடுக்கு மாஸ்க்

இப்போது, பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இந்த உடையை தயாரித்துள்ளோம். இதுவரை, ஒரு லட்சம் பேர் இந்த உடையைக் கேட்டு ஆர்டர் கொடுத்துள்ளனர். ஒரு பாதுகாப்பு உடையின் விலை 1,500 ரூபாய். அதேபோல், மூன்று அடுக்குகள் கொண்ட வைரவீட்டோ என்ற பிரத்யேக மாஸ்க்கையும் தயாரித்துள்ளோம். இதன் விலை 60 ரூபாய். இந்தப் பாதுகாப்பு உடைகளின் ஆர்டர்கள் அதிகமானால், கரூரில் தத்தளிக்கத் தொடங்கியிருக்கும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் கொஞ்சம் நிமிரும். வேலையின்றி தவிக்கும் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும்" என்றார்.



source https://www.vikatan.com/news/healthy/karur-textile-company-manufactured-new-type-of-corona-safety-material-in-cotton

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக