Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

ரோட்டில் குவிந்த கொரோனா நோயாளிகள்; பதறிய சுகாதாரத் துறையினர்! - ஊட்டி சர்ச்சை

கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நீலகிரியில், தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, படுகர் இன மக்கள் வாழும் (ஹட்டி) கிராமங்களில் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது.

கலெக்டர் ஆய்வு

நீலகிரியில் நோய் பாதிப்பு கண்டறியப்படும் நபர்களை ஆரம்பத்தில் கோவை மாவட்டம், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஆழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால், தற்போது முதல்வகை அறிகுறிகள் இருப்பவர்களுக்கு ஊட்டியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள்  ஊட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை இது தவிர, குட்செப்பர்டு மற்றும் லவ்டேல் லாரன்ஸ் பள்ளிகளில் சிறப்பு சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகள்

இந்த நிலையில், லவ்டேல் லாரன்ஸ் பள்ளி சிறப்பு சிகிச்சை முகாமில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி, தாங்கள் அவதிப்பட்டு வருவதாக வெளியில் வந்து கோரிக்கைகளை நோயாளிகள் முன் வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா பாதித்தவர்கள் கூட்டமாக நின்று வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பேசும் பெண் ஒருவர், ``நாங்கள் தங்கியுள்ள இந்த சிறப்பு முகாமில், எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. நாங்கள் இங்கு வரும்போது எங்களுக்கு எந்த நோய் பாதிப்பும் இல்லை. 

covid patients

ஆனால், இங்கு வந்த பின்பே எங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீர், வெந்நீர் போன்றவை வழங்குவதில்லை. தேவையான அளவு போர்வைகள், கூடத் தரப்படுவதில்லை இதனால் இரவு முழுக்க குளிரில் தவிக்கிறோம்.

Also Read: கொரோனா: `போராடிய நோயாளிகள்!’ - சொந்த செலவில் உணவு வழங்கிய கோட்டாறு இன்ஸ்பெக்டர்

கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். மருத்துவர்கள் யாருமே இங்கு வருவதுமில்லை. எனவே, எங்களை எங்கள் வீட்டிற்கே அனுப்பி விடுங்கள். நாங்கள் எங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறோம்’’ எனக் கூட்டமாக வெளியில் வந்து நின்று பேசி வெளியான வீடியோ தற்போது மாவட்டம் முழுவதும் சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகிறது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தாக்கத்தால் ஊட்டி சுகாதாரத்துறை அதிகாரிகள் பதறியடித்து அங்கு விரைந்துள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ``பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில், சிகிச்சை முகாம்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/covid-19-patients-staged-protest-in-ooty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக