Also Read: கொரோனா: `முடிவுகள் கொடுப்பதில் தாமதம்' -தேனி நிர்வாகத்தைச் சுற்றும் சர்ச்சை
துபாய், குவைத், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் பணியாற்றிவரும் தமிழர்கள், கொரோனா வேலையிழப்பு மற்றும் கொரோனா அச்சம் காரணமாகத் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இவர்கள், கேரள மாநிலம் கொச்சி விமானநிலையம் வந்தடைந்து, கேரள அரசு ஏற்பாடு செய்யும் பேருந்து மூலமாக, தமிழக கேரள எல்லையான குமுளி வருகின்றனர். எல்லையில் உள்ள தேனி மாவட்ட நிர்வாகத்தினர், அவர்களுக்கு சாப்பாடு வசதி ஏற்பாடு செய்துகொடுத்து, அரசுப் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
Also Read: தேனி:`வனத்துறை செய்வது கொஞ்சம்கூட சரியில்லை!' -கொதிக்கும் மேகமலை விவசாயிகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 பேர், திங்கள்கிழமை 114 பேர், செவ்வாய்க்கிழமை 150 பேர் என கொச்சி விமான நிலையத்தில் இருந்து குமுளி வந்தனர். அவர்களை அழைத்துவரும் தேனி மாவட்ட நிர்வாகத்தினர், கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைத்து சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களின் சொந்த ஊர் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, இ-பாஸ் விவரங்களை சரிபார்க்கின்றனர். இ-பாஸ் சரியாக இருப்பின், அவர்களை அரசுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
Also Read: ‘இ-பாஸ் விதிமுறைகளைக் கடுமையாக்கிய கேரளம்’ - தவிக்கும் தேனி ஏலக்காய் விவசாயிகள்!
``துபாயில் இருந்து வருபவர்களே அதிகமாக இருக்கின்றனர். இவர்கள், கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தேனி - இடுக்கி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, இது நடந்து வருகிறது. இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. இங்கே வந்த பின்னர், அவர்களின் சொந்த மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும் விவரம் தெரிவிக்கப்படும். தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், அங்கே, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வார்கள்” என்றார் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/tamils-working-abroad-return-to-tn-via-kerala-increased-over-corona-fear
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக