Ad

புதன், 15 ஜூலை, 2020

`92.3 சதவிகித தேர்ச்சி’ - தமிழகத்தில் வெளியானது ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள்! #NowAtVikatan

வெளியானது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வுகளின் முடிவுகள் இன்று காலையே வெளியானது. இந்தத் தேர்வில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் மாணவிகள் 94.8 சதவிகிதமும் மாணவர்கள் 89.41 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தமுள்ள 7,127 மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை என்பது 2,120 ஆக உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் இந்த முறை திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது.

மாணவ மாணவிகள் இணையதளம் மூலமாகத் தங்களின் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். அது தவிர மாணவர்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை காலை 9.30 முதல் இணையதங்களில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/16-07-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக