Ad

புதன், 8 ஜூலை, 2020

`டிஸ்ப்ளே செம, ஆனா கேமரா..?' எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ? #VikatanGadgetReview

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பல தடங்கல்களுக்குப் பிறகு விற்பனைக்கு வந்துவிட்டன. கடந்த ஏப்ரல் மாதமே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டாலும், இதன் விற்பனை என்பது கொரோனாவால் பல முறை தள்ளிவைக்கப்பட்டது. `McLaren edition' போன்ற லிமிடெட் எடிஷன் போன்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தும் ஒன்ப்ளஸ். ஆனால், கொரோனா நெருக்கடியால் 8 ப்ரோவே லிமிடெட் எடிஷன் போன் போலத்தான் விற்பனைக்கு வந்திருக்கிறது. சிறப்பு ஃபிளாஷ் சேல்களில்தான் விற்கப்படுகிறது. மொத்தமாக `ஃபிளாக்ஷிப் கில்லர்' என்ற ஸ்டேட்டஸிலிருந்து `பிரீமியம் ஃபிளாக்ஷிப்' ஸ்டேட்டஸுக்கு உயர நினைத்திருக்கும் ஒன்ப்ளஸுக்கு கைகொடுக்குமா இந்த ஒன்ப்ளஸ் 8 ப்ரோ? சுமார் இரண்டு வாரப் பயன்பாட்டுக்குப் பின்னான அனுபவத்தை இங்கு பகிர்கிறோம்.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

ஒன்ப்ளஸ்ஸின் ட்ரேட் மார்க் டிசைனுடன் வந்திருக்கிறது 8 ப்ரோ. கையில் எடுத்ததுமே `ஒரு தரமான ப்ரீமியம் போன்தான் இது' என்ற உணர்வைத் தருகிறது. நாங்கள் டெஸ்ட் செய்தது Ultramarine Blue நிற மாடல். பார்க்க செம ஸ்டைலிஷாகவே இருக்கிறது. புகைப்படங்களைப் பார்த்தால் மற்ற நிறங்களிலும் குறைகள் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சற்றே பெரிய போன் என்பதை மனதில் கொள்ளவும். சிலருக்கு ஒற்றைக் கையில் இதைப் பயன்படுத்துவது அவ்வளவு சௌகரியமாக இருக்காது.

Hands-On அனுபவத்தில் இது ஏமாற்றவில்லை. இதுவரை ஆண்ட்ராய்டு போன்களில் இப்படியான ஒரு டிஸ்ப்ளேவை பார்த்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 6.78 இன்ச் QHD+ Fluid AMOLED டிஸ்ப்ளே செம ஷார்ப்பாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. காரணம், இதில் இருக்கும் சிறப்பு 10-பிட் டிஸ்ப்ளே பேனல்தான். ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் தற்போதைய பிரீமியம் போன்களின் டிஸ்ப்ளேக்களால் சுமார் 1.6 கோடி நிறங்களை மட்டுமே ஒளிபரப்ப முடியும். ஆனால், இது சுமார் 100 கோடி நிறங்கள் வரை இந்த டிஸ்ப்ளேவால் ஒளிபரப்ப முடியும் எனச் சொல்லியிருந்தது ஒன்ப்ளஸ். அதற்கேற்றவாறே நிறங்கள் தெறிக்கும் டிஸ்ப்ளேவாகவே இது இருக்கிறது. படங்கள், வெப்-சீரிஸ்கள் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறந்ததாக இருக்கிறது.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

இது 120 hz டிஸ்ப்ளேவும்கூட. அதாவது, 1 விநாடிக்கு 120 முறை தனது ஸ்கிரீனில் இருப்பதை இதனால் ரி-ஃப்ரெஷ் (மாற்ற) செய்ய முடியும். இதனால் ஒரு ஆப்பிலிருந்து இன்னொரு ஆப்புக்குச் செல்வது தொடங்கி சின்னச் சின்ன விஷயங்கள்கூட இதில் மிகவும் ஸ்மூத்தாக இருப்பதை உணர முடிகிறது. கேமிங்க்குக்கும் பக்காவான டிஸ்ப்ளே. ஆனால், ஒரே குறை அந்த பஞ்ச் ஹோல் கேமரா. ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் பாப்-அப் கேமரா கொடுத்து ஒரு ஃபுல்-டிஸ்ப்ளே அனுபவத்தைக் கொடுத்திருந்தனர். `பாப்-அப் கேமராவில் ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்' என்று அதன் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அப்படி எதுவுமே யாருக்கும் வந்ததாகத் தெரியவில்லை. அப்படியும் ஏன் மீண்டும் பஞ்ச் ஹோல் போன்ற ஒரு செட்-அப்புக்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை. விலை குறைப்பு முயற்சியாகக்கூட இருக்கலாம். கடந்த ஒன்ப்ளஸ் போன்கள் மாடல்களில் இருந்த அதே இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் கொடுத்திருக்கிறார்கள். புதிதாக எதுவுமில்லை, முன்பு இருந்த அதே வேகத்தில் செயல்படுகிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் டால்பி அட்மாஸ் சப்போர்ட்டுடன் வருகிறது. டிஸ்ப்ளேவுக்கு ஈடுகொடுக்கும் ஆடியோ தரம்தான். அழைப்புகள் பேசுவது போன்ற விஷயங்களிலும் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் நன்றாகவே செயல்படுகின்றன. கடந்த ஒன்ப்ளஸ் போன்கள் போல ஹெட்போன் ஜாக் கிடையாது.

மொத்தம் நான்கு கேமராக்களுடன் வெளிவந்திருக்கிறது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. 48 MP மெயின் கேமரா (சோனி IMX689 சென்ஸார்), 48 MP அல்ட்ரா வைடு கேமரா (சோனி IMX586 சென்ஸார்), 8 MP டெலிபோட்டோ கேமரா மற்றும் ஒரு கலர் ஃபில்டர் கேமரா என நான்கும் ஒவ்வொரு விஷயத்துக்காக இருக்கின்றன. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் அல்ட்ரா வைடு கேமராவுக்கும், மெயின் கேமரா அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான். 48 MP சோனி IMX586 சென்ஸாருடன் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் எந்த போனை விடவும் சிறந்த வைடு ஆங்கிள் புகைப்படங்களை எடுக்கும் திறனுடையது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. இது புகைப்படங்களிலும் பளிச்சிடுகிறது. நான் சொல்வதைவிட நீங்களே பார்த்துவிடுங்கள். ஒன்ப்ளஸ் 8 ப்ரோ | OnePlus 8 pro photos

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ! | OnePlus 8 pro photos

வீடியோ பர்ஃபாமன்ஸும் நன்றாகவே இருக்கிறது. ஆனால், இந்த நான்காவது கேமராதான் வீணடிக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு மென்பொருள் உதவியும் இல்லாமல் நிறங்கள் மாறிய, எடிட் செய்யப்பட்டதைப் போன்ற போட்டோக்களை எடுக்க கலர்-ஃபில்டர் கேமரா ஒன்றைக் கொடுத்திருந்தனர். ஆனால், அது சில பொருள்களை ஊடுருவிப் பார்க்கிறது எனக் குற்றசாட்டு எழுந்தது. இதையடுத்து அதை `Disable' செய்திருக்கிறது ஒன்ப்ளஸ். இப்படியான சொதப்பலுக்கு வேறு ஏதேனும் சுமாரான கேமராகூட கொடுத்திருக்கலாம். மற்றபடி 16 MP செல்ஃபி கேமராவும் சிறப்பாகவே இருக்கிறது.

Also Read: ஆடைகளை ஊடுருவி படம் எடுக்கிறதா ஒன்ப்ளஸ் 8 ப்ரோ கேமரா... உண்மை என்ன? #VikatanAnalysis

OnePlus 8 Pro

சமீபத்திய குவால்கம் ஸ்னாப்டிராகன் 865 புராசஸர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் 5G சப்போர்ட்டும் இந்தப் போனுக்கு இருக்கும். இப்போது பயனில்லை என்றாலும் வரும்போது கைகொடுக்கும். Wifi 6, ப்ளூடூத் 5.0, UFS 3.0 ஸ்டோரேஜ் என அனைத்தும் அப் டு டேட். இது பர்ஃபாமன்ஸில் பளிச்சிடுகிறது. பழைய புராசஸர்களுக்கும் இந்த ஸ்னாப்டிராகன் 865-க்குமான வித்தியாசத்தைப் பயன்பாட்டில் உணர முடியாது. ஹை-கிராபிக்ஸ் கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற ஹெவி விஷயங்கள் அனைத்துமே ஸ்மூத்தாவே இயங்குகின்றன. ஏனென்றால் கடந்த ஒன்ப்ளஸ் போன்களிலிருந்த புராசஸர்களே நல்ல செயல்திறனுடன் இருந்தன. இதனால் பெரிய மாறுதல்களை உங்களால் உணர முடியாது. கூடுதல் சக்தி என்பது நெடுநாள் ஓடுவது நன்றாகவே பயன்படும் என்பதால் சில வருடங்களுக்கு எந்த ஒரு பர்ஃபாமன்ஸ் குறைபாடும் இல்லாமல் இருக்கும் இது.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ!

எப்படியும் ஒரு நாள் முழுவதும் தாக்குப்பிடித்துவிடுகிறது. 120 Hz ஆப்ஷனை ஆஃப் செய்துவிட்டால் இன்னும்கூட பேட்டரியை சேமிக்கலாம். ஆனால், போனின் முக்கிய ஹைலைட்டே அதுதான் என்பதால் அதைச் செய்யுங்கள் எனப் பரிந்துரை செய்ய மாட்டோம்.

7T மாடல்களில் வந்த Warp Charging 30T இதில் தரப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் மேக்லாரன் எடிஷன் போனில் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டிருந்தது. அதையே இதற்கும் தந்திருந்திருக்கலாம். அதற்காக இது வேகமாக இல்லை என்றில்லை. 1 மணிநேரத்திற்குள் முழு 4,510 mAh பேட்டரியையும் சார்ஜ் செய்துவிட முடிகிறது. வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் 30 W வேகத்தில். ஆனால், இதற்கு நீங்கள் தனியாக ஒன்ப்ளஸின் வயர்லெஸ் சார்ஜிங் பேட் வாங்க வேண்டியது இருக்கும். விலை 3,999. இந்த வசதியை நாங்கள் டெஸ்ட் செய்துபார்க்கவில்லை. வாட்டர்ப்ரூஃப் ரேட்டிங்குடன் (IP68) வெளிவரும் முதல் ஒன்ப்ளஸ் போன் இதுதான்.

இம்முறை கொரோனாவின் காரணத்தால் குளோபல் லாஞ்ச்தான் நடந்ததது. அதில் 8 ப்ரோவின் ஆரம்ப விலை 899 டாலர்கள் என அறிவிக்கப்பட்டது. இந்தியா விலையில் சுமார் 67,426 ரூபாய். அப்படி இருக்கையில் இந்தியாவில் 60,000 ரூபாயை இந்த விலை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 54,999 ரூபாய்க்குத்தான் இங்கு விற்பனைக்கு வந்திருக்கிறது. யாரும் எதிர்பார்த்திராத இந்த விலை ஒன்ப்ளஸ் 8 ப்ரோவின் மிக முக்கிய ப்ளஸ். இருப்பினும் இந்தியாவில் நிலவும் சீன பொருள்களுக்கு எதிரான மனநிலையில் எப்படியான விற்பனையை இது காணும் என்பது தெரியவில்லை. இப்போதுவரை செய்யப்பட்ட ஃபிளாஷ் சேல்கள் அனைத்திலும் விற்றுத்தீர்ந்துவிட்டது என்பதை மட்டும் சொல்லலாம்.

Also Read: OnePlus: `குறையாத டிமாண்ட்!’ -ஃபிளாஷ் சேலில் மீண்டும் கலக்கிய ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

ப்ளஸ்

  • செம டிஸ்ப்ளே

  • பர்ஃபாமன்ஸ்

மைனஸ்

  • சற்றே பெரிய போன்

  • பயனில்லாத கலர் ஃபில்டர் கேமரா

இறுதிக் கருத்து

பெயருக்கு ஏற்றாற்போல இதில் இருக்கும் அம்சங்கள் அனைத்துமே `ப்ரோ'தான். `ப்ரீமியம் போன்தான். ஆனால், இந்த விலைக்கு இதெல்லாம் வராது' என எப்போதுமே சில அம்சங்களைப் புறம் தள்ளிவிட்டே அதன் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்ப்ளஸ். வாடிக்கையாளர்களுக்கும் அது பெரிய குறையாகத் தெரியாது, ஆனால்; ஆப்பிள், சாம்சங் போன்ற ப்ரீமியம் போன்களில் இருப்பது நம்மிடம் இல்லையே என்ற சின்ன ஏக்கம் இருக்கும். அதற்காகவே இம்முறை `எல்லா விதத்திலும் எங்கள் போன் பிரீமியம்தான்' எனச் சொல்லி அடித்திருக்கிறது ஒன்ப்ளஸ். பட்ஜெட் 50,000 ரூபாய் என முடிவாகிவிட்டதென்றால் தற்போது இந்தியச் சந்தையில் ஒன்ப்ளஸ் 8 ப்ரோதான் பெஸ்ட் சாய்ஸ்!



source https://www.vikatan.com/technology/gadgets/oneplus-8-pro-review-vikatangadgetreview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக