Ad

திங்கள், 6 ஜூலை, 2020

கோவை: காப்பீட்டில் போலிக் கணக்குகள்! - சிக்கிய 4 பரிசோதனை மையங்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 120-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவாகியுள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை

Also Read: கொரோனா :`நெகட்டிவ் சான்றிதழ் தர ரூ.2,500’ - பேரம் பேசிய நபர்; உ.பி மருத்துவமனைக்கு சீல்

முக்கியமாக, கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகியவற்றுடன் எட்டு தனியார் பரிசோதனை மையங்களிலும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே, தனியார் பரிசோதனை மையங்களில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Also Read: கொரோனா :`நெகட்டிவ் சான்றிதழ் தர ரூ.2,500’ - பேரம் பேசிய நபர்; உ.பி மருத்துவமனைக்கு சீல்

இந்த நிலையில், கோவையில் கொரோனா பரிசோதனையில் முறைகேடு செய்ததாக, ஆர்பிட்டோ ஏசியா, பயோலைன், மைக்ரோ பயாலஜி, கிருஷ்ணா லேப் ஆகிய நான்கு தனியார் பரிசோதனை மையங்களுக்கான அனுமதியை சுகாதாரத்துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா

இந்தப் பரிசோதனை மையங்கள், அதிக லாபம் பார்ப்பதற்காக போலி அடையாள அட்டைகளை வைத்து, முறைகேடாக கணக்குக் காட்டி கொரோனா பரிசோதனை செய்வதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக சுகாதாரத்துறை குழு அமைத்து விசாரித்து வந்தது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்தப் பரிசோதனை மையங்கள் இன்சூரன்ஸ் மூலம் கட்டணங்களை எடுத்துக்கொள்வதற்கான அங்கீகாரம் பெற்றவை. அதன்படி, முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டம் போன்றவை மூலம் கொரோனா பரிசோதனைக் கட்டணத்தைப் பெற்று வந்தன. இதனிடைய, குறுகிய காலகட்டத்தில் இந்த நான்கு பரிசோதனை மையங்களில், பரிசோதனைகள் வெகுவாக அதிகரித்திருந்தது தெரியவந்தது.

கொரோனா பரிசோதனை

விசாரணையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், போலியான கணக்கு காட்டி பரிசோதனை செய்ததும் உறுதியாகியுள்ளது. அதனால், சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி அந்த நான்கு பரிசோதனை மையங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றனர்.



source https://www.vikatan.com/news/controversy/4-labs-in-coimbatore-barred-from-corona-test

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக